Monday, May 4, 2015

மாவத்தல் / Mavathal


இப்போது மாங்காய் சீசன் ஆரம்பமாகி விட்டது. மாங்காயை வைத்து ஒரு வருடத்திற்கு தேவையான மாவத்தல் செய்து வைத்துக் கொள்ளலாம். மாவத்தலை வைத்து குழம்பு செய்தால் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இனி மாவத்தல் எப்படி செய்வதென்று பார்ப்போமா !

தேவையான பொருள்கள் -
  1. மாங்காய் - 7
  2. உப்பு - 125 கிராம் 
செய்முறை -
  1. மாங்காய்களை நன்கு கழுவி ஈரம் போக ஒரு துணியால் நன்கு துடைக்கவும்.
  2. பிறகு எல்லா மாங்காய்களையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொட்டைகளை சேர்க்க வேண்டாம்.                                                                            
  3. ஒரு வாயகன்ற பிளாஸ்டிக் பாத்திரத்தில் மாங்காய் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். இடை இடையே நன்கு குலுக்கி விடவும். சிறிது தண்ணீர் விடும்.     
  4. மறு நாள் மாங்காய் துண்டுகளை எடுத்து ஒரு தாம்பாளத்தில் பரப்பி வெயிலில் காய வைக்கவும். அந்த உப்பு தண்ணீரை வீணாக்காமல் மூடி வைக்கவும்.                                  
  5. காய்ந்தவுடன் மாங்காய் துண்டுகளை மறுபடி உப்புத் தண்ணீரில் போடவும்.
  6.  மறுநாள் எடுத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.  உப்புத் தண்ணீர் வற்றும் வரை இதே முறையில் செய்யவும். உப்புத் தண்ணீர் வற்ற மூன்று நாட்கள் வரை ஆகும்.
  7. எனவே மூன்று நாட்கள் வரை இதே முறையில் செய்யவும்.
  8. நன்கு காய்ந்தவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
  9. இந்த அளவுக்கு 60 மாவத்தல் வரும். மாவத்தல் குழம்பு ரெசிபி பார்க்க இங்கே கிளிக் பண்ணவும். 

20 comments:

  1. ஆஹா...சூப்பர் சகோ. இன்னைக்குத் தான் நான் வேறு வற்றல் போட்டேன். அது காயவும் பதிவாய் வரும். மாவத்தல் ஊரில் இருந்து கொண்டு வந்து வைத்திருக்கிறேன். மாவத்தல் சாம்பார் சூப்பராக இருக்கும். அடிக்கடி செய்வோம். உங்கள் செய்முறைக்கு ஆவலாய்...காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. வாங்க சகோ உங்களுடைய வற்றல் பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. தாய் ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பார்கள்!..

    பலவகையான மருத்துவ குணங்களை உடைய மா - வாழ்க!..

    ReplyDelete
  4. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  5. மாங்காய் வற்றல் தயாரிக்கும் விதம் அருமை! தெளிவாய் எழுதியிருக்கிறீர்கள். மயிலாடு துறைப்பக்கம் மாங்காய்த்துண்டுகளை கொதிநீரில் போட்டு ஒரு கொதி வந்ததும் எடுத்து காய வைக்கிறார்கள். அதுவும் நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  6. வாங்க மனோ அக்கா கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் மூலம் வெந்நீரில் மாங்காய் துண்டுகளை போட்டு வற்றல் செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டேன். அதையும் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. வணக்கம்
    வாசித்துகொண்டு போகும் போது வாயில் எஞ்சில் ஊரியது... மிக அருமையான செய்முறை விளக்கம் எங்கள் ஊரிலும் மாங்காய் அதிகம் இப்போது... நிச்சயம் செய்து பார்க்கிறோம்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக வீட்டில் செய்ய சொல்லுங்கள்.

      Delete
  8. செய்திடுவோம் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வீட்டில் செய்ய சொல்லுங்கள்.

      Delete
  9. எனக்கு செய்முறை தெரியாது, இன்று தெரிந்துகொண்டேன். இனி வற்றல் நான் தயார் செய்வேன்.

    ReplyDelete
  10. வாங்க மகேஸ்வரி கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    ReplyDelete
  11. இந்த சீஸனுக்கு ஏற்ற பயனுள்ள பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
  12. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி.

    மா வற்றல் செய்முறை பயனுள்ள பகிர்வாக தந்திருக்கிறீர்கள். அருமையாக இருந்தது.பதிவு பழைய ஞாபங்களை,சுவைகளை நினைவூட்டியது.

    முன்பு ஊரிலிருந்து (அம்மாவீட்டிலிருந்து ) வரும் சமயம் இந்த வற்றல வகைகளை கொடுத்தனுப்புவார்கள். இருக்கும் இடத்தின் வசதிகளால் சிலவற்றை வீட்டில் தயாரிக்க இயலாது, கடைகளில் வாங்கிக் கொள்ளும் நிர்பந்தங்களுடன் காலம் நகர்கிறது. தங்கள் பதிவு பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது. பழைய நினைவுகளின் சுவையோடு படித்து மகிழ்ந்தேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. அட சமையல் கலை.... இங்கு இவ்வளவு நாளும் தவறவிட்டு விட்டேனே.
    எல்லாம் ஈசியான மெதேட் போல ம்..ம். தொடர்கிறேன் இனி ....இப்போ இங்கு சமர் தானே மாங்காய் வத்தல் போட்டிட வேண்டியது தான் ....மிக்க நன்றி பதிவுக்கு.

    ReplyDelete
  15. arumaiyana padhivu nanum seydhu parkiren

    ReplyDelete
  16. இன்று எங்கள் வீட்டு மாமரத்தில் காய் பறித்து, நீங்கள் சொன்னபடி வற்றல் செய்ய போகிறேன்

    ReplyDelete
  17. கண்டிப்பாக செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...