தேவையான பொருட்கள் -
- கோதுமை - 1 கப்
- ப்ரவுண் சுகர் (அல்லது ஒயிட் சுகர்) - 3 கப்
- முந்திரி பருப்பு - சிறிது
- நெய் - 1 1/2 கப்
- ஒரு கப் கோதுமையை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 6 - 8 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும். பிறகு அதை மிக்சியில் அரைத்து பால் எடுக்க வேண்டும்.
- மிக்சியில் ஊறிய கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும். பிறகு அரைத்ததை சல்லடையில் வடிகட்டவும்.
- மறுபடி மிக்சியில் கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை அதே பாத்திரத்தில் வடிகட்டவும்.
- கோதுமை பாலை 3 - 4 மணி நேரம் அசைக்காமல் மூடி வைக்கவும். பிறகு பார்த்தால் மேலே தெளிந்த நீரும் கீழே கொஞ்சம் கட்டியான கோதுமை பாலும் இருக்கும்.
- ஒரு கரண்டியால் மேலே உள்ள தெளிந்த நீரை மெதுவாக எடுத்து விடவும்.
- நெய்யை உருக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு நான்-ஸ்டிக் கடாயில் கோதுமை பாலை ஊற்றவும். அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்பொது அடுப்பை ஆன் செய்து கடாயை வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
- இப்போது இருந்தே கிளற ஆரம்பிக்கவும். சூடானதும் அடியில் கட்டி போல் உருவாகும். கிளற கிளற எல்லாம் ஒன்றாக வரும்.
- பால் கெட்டியானதும் சக்கரையை சேர்க்கவும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். நான் ப்ரவுன் சுகர் சேர்த்திருப்பதால் தானாகவே அல்வா கலர் மாறி விடும்.
- ஒயிட் சுகர் சேர்ப்பதாக இருந்தால் தானாக பிரவுன் கலர் வராது. கலர் வருவதற்கு கீழே உள்ள குறிப்பை பார்க்கவும்.
- கை விடாமல் கிளறி கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும். இப்போது உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். மொத்தமாக நெய்யை சேர்க்காமல் கடாயில் அல்வா ஒட்டும் போதும் மட்டும் கொஞ்சம் நெய்யை சேர்த்துக் கிளறி கொண்டே இருக்கவும். வறுத்த முந்திரியை சேர்த்து கொள்ளவும்.
- கடைசியாக நெய் அல்வாவிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும். கரண்டியில் ஒட்டாமல் அல்வா கீழே விழும். அது தான் சரியான பதம். அடுப்பில் கோதுமை பாலை வைத்ததிலிருந்து இந்த பதம் வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகும்.
- அடுப்பை அணைக்கவும். சுவையான அல்வா ரெடி. ரெடியான அல்வாவை ஒரு நெய் தடவிய ட்ரேயில் போட்டு ஆறியதும் கட் செய்து பரிமாறலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.
- 250 கிராம் கோதுமைக்கு அரை கிலோவுக்கு கொஞ்சம் கூடுதலாகவே அல்வா வரும்.
- ஒயிட் சுகர் சேர்த்து செய்யும் போது அல்வாவுக்கு கலர் கிடைப்பதற்க்கு கொஞ்சம் ஆரஞ்சு புட் கலர் சேர்த்துக் கொள்ளவும்.
- புட் கலர் சேர்க்க விரும்பாதவர்கள் சுகரை கேரமல் (caramel) செய்து சேர்த்து கொண்டால் பிரவுன் கலரில் அல்வா வரும். கேரமல் செய்வதற்கு ஒரு கடாயில் அரை கப் சக்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தீய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சக்கரை பாகு பிரவுண் கலராக மாறும். அடுப்பை உடனே அணைத்து விடவும். கேரமல் ரெடி. இதை அல்வா கிண்டும் போது மற்றொரு அடுப்பில் செய்து கொள்ளவும். முந்திரி பருப்பு சேர்க்கும் பொது இதையும் சேர்த்து விடுங்கள். பிரவுண் கலர் அல்வா ரெடி.
- ப்ரிஜ்ஜில் வைத்து 2 -3 வாரம் வைத்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொது தேவையான அல்வாவை எடுத்து ஒரு கடாயில் போட்டு கிளறி சூடுபடுத்தி பரிமாறவும். மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடுவதை விட அடுப்பில் சூடுபடுத்தி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இந்த அரைத்து பால் எடுத்து, அந்த பக்குவம் எல்லாம் வருமா? என்று சந்தேகம் தான். ஆனாலும் செய்யனும் என்று ஆசை. எளிய செயல்முறை விளக்கம். நன்றி.
ReplyDeleteகண்டிப்பாக வரும் மகேஸ்வரி. உங்கள் மீது நம்பிக்கை வைத்து கண்டிப்பாக செய்து சுவைத்து மகிழுங்கள்.
Deleteஆஹா ஸூப்பர் ஹல்வா.... நமக்கும் மேலே ஒரு ஆள் முந்திடுறாங்களே....
ReplyDeleteவருகைக்கும் உங்கள் நகைச்சுவையான கருத்துக்கும் நன்றி சகோ.
Deleteமிக அருமை! புகைப்படமும் செய்முறையும் உடனேயே செய்து சாப்பிடத் தூண்டுகிறது!
ReplyDeleteகண்டிப்பாக செய்து பாருங்கள் அக்கா. உங்களுக்கு மிகவும் எளிதாக வந்து விடும்.
Deleteசூப்பர் அல்வா....
ReplyDeleteஇதுவரை செய்யாத இந்த அல்வாவை செய்யத் தூண்டுகிறது....உங்களின் பதிவு. நன்றி
வாங்க சகோ தாமதிக்காமல் உடனே செய்து அசத்தி விடுங்கள்.
Deleteவாவ்.... சூப்பர்....!
ReplyDeleteபதிவை bookmark செய்து கொண்டேன்.... நன்றி....
bookmarkil பதிவு பண்ணி வைத்துக் கொண்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
Deleteஇந்தத் திருநெல்வேலி அல்வாவில் திருநெல்வேலியில் கிடைக்கும் அல்வாவின் ருசி கிடைக்குமா?
ReplyDeleteகண்டிப்பாக அதே சுவையில் தான் இருக்கும் சார்.
Deleteமுன்பெல்லாம் ஆட்டுக்கல்லில் இட்டு அரைத்து செய்வார்கள்..
ReplyDeleteமிக்ஸி வந்து வேலையை எளிதாக்கி விட்டது..
அல்வா கொடுக்கறது.. ன்னு சொன்னாலும் அந்த அல்வாவுக்கு இவ்வளவு பக்குவம் வேண்டியிருக்கின்றது..
இனிமையாக செய்முறைக் குறிப்புகளை வழங்கியதற்கு மகிழ்ச்சி..
முன்பெல்லாம் அம்மா ஆட்டுக்கல்லில் தான் அரைத்து செய்வாங்க. அம்மா அல்வா செய்வது ருசி அருமையாக இருக்கும்.
ReplyDeleteநீங்கள் சொன்ன மாதிரி இப்போது மிக்ஸ்சி வந்து விட்டது. இந்த முறையிலும் சுவை அருமையாக இருக்கும்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
பார்த்தவுடன் வாய் ஊறிவிட்டது.. நிச்சயம் செய்து சாப்பிடுகிறோம் குறிப்பு எடுத்தாச்சி. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குறிப்பை பார்த்து கண்டிப்பாக செய்து விடுங்கள் ரூபன்.
Deleteநன்றி சகோதரி!
ReplyDeleteஇனி உங்களுக்கு யாரும் அல்வா கொடுக்க முடியாது!
கருத்திட வருகிறேன்!
இதோ வந்து விட்டேன்!
என்று யாரும் தப்பிக்க முடியாது! என்று சொன்னேன்.
ஏனெனில் "அல்வா"வின் தரம் அப்படி!
விசேஷ நாட்களில் இதைதான் செய்ய போகிறோம்!
நட்புடன்,
புதுவை வேலு
கண்டிப்பாக செய்து எல்லோரும் சுவைத்து சாப்பிடுங்கள்.
ReplyDeleteஇது எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப நாளாகவே செய்யவேண்டும் ஏறனு ஆசை தான் ஆனால் ட்ரை பண்ணியதே இல்லை. ஸ்ரீ இனியாவது ட்ரை பண்ணிப் பார்ப்போம். நன்றி நன்றி ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteகண்டிப்பாக முயற்சி பண்ணி பாருங்கள் இனியா.
ReplyDeleteபுகைப்படத்துடன்,செய்முறை விளக்கமும் தெளிவாக கொடுத்துள்ளீர்கள் ,நன்றி...
ReplyDeleteவிரைவில் செய்து பார்க்கிறேன் ...
வாழ்க வளமுடன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரிதா.
Deleteபுகைப்படங்களுடன் கூடிய அல்வா தயாரிப்பு முறை சூப்பர்! பார்க்கவே ஜோராக இருக்கிறது. கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அருமையான விளக்கத்துக்கு மிகவும் நன்றி சாரதா!
ReplyDeleteவாங்க கலைஅரசி கண்டிப்பாக செய்து பாருங்கள்.
ReplyDeleteஇன்று அனைவருக்குமே ‘அல்வா’ கொடுத்துட்டீங்க ! :) பாராட்டுகள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteஅல்வாவின் செய்முறைகள் படத்துடன் பிரமாதபடுத்தி விட்டீர்கள். அருமையாக வந்திருக்கிறது, பார்க்க பார்க்க சாப்பிடும் எண்ணம் அதிகமாகிறது. நானும் இதே முறையில் முன்பு செய்திருக்கிறேன். (கல்லுரலில் அரைத்து) சொந்த ஊரின் சிறப்பை மறக்க முடியுமா? நினைவூட்டியமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள் சகோதரி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
உங்கள் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி.
ReplyDeleteஅல்வா செமை அக்கா. நான் இதுவரை முயற்சித்தது இல்லை. பார்க்க நாவூறுகிறது,.
ReplyDeleteஆசியா உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீங்களும் செய்து பாருங்கள். உங்களுக்கு ஈஸியாக வந்து விடும்.
ReplyDeleteஅம்மா அல்வா பண்ணிட்டேன் செம டேஸ்ட்.. போட்டோ அனுப்பியிருக்கேன்..
ReplyDelete
ReplyDeleteபோட்டோ பார்த்தேன் அபி. நீ செய்த அல்வாவும் செம டேஸ்ட் ஆக இருந்தது.
nice halwa going to prepare today. cane sugar is brown sugar am i right madam?
ReplyDeleteTHANKS A LOT MAM. VERY NICE NARRATION. EASY TO FOLLOW.
ReplyDeleteTake a cup of wheat and soak in water for the first night.( IT SHOULD BE SOAK NOT FIRST NIGHT --PREVIOUS NIGHT.)
திருநெல்வேலி அல்வாவின்சுவைக்கு அம்மாவட்டத்தின் ததண்ணீர் ஒரு ககாரணம் என்பது உண்மையா
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி தான் அல்வாவின் ருசிக்கு காரணம் எங்கள் ஊரான திருநெல்வேலி தாமிரபரணி தண்ணீர் தான். தண்ணீர் மிகவும் டேஸ்ட்டாக இருக்கும்.
ReplyDeleteசம்பாவா பஞ்சாபா எந்த கோதுமை பயன்படுத்துவது நல்லது?
ReplyDeleteசம்பா கோதுமை தான் பயன் படுத்த வேண்டும்.
ReplyDeleteஅல்வா சூப்பர்.... பர்வீன் சுகர் எங்கு கிடைக்கும்? பர்வீன் சுகரும் நாட்டுச்சர்க்கரையும் ஒன்றா மேடம்?
ReplyDelete