Friday, May 8, 2015

தக்காளி கூட்டு / Tomato Curry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி - 5
  2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
                                                                                    
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 50 கிராம் 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
                                                                       
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
                                                                           
  4. தக்காளி நன்கு மசிந்ததும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும் .
                                                                         
  5. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். 
                                                                                   
  6. கூட்டு  கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான தக்காளி கூட்டு ரெடி. பூரி, சப்பாத்தி, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

19 comments:

  1. ஆஹா தக்காளி கூட்டு அருமையாக இருக்கிறது எனகேக் மிகவும் பிடித்தமானது.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கு மிக்க நன்றி சகோ. தங்களுக்கு பிடித்த கூட்டு என்பதை தங்கள் கருத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

      Delete
  2. நேற்றுதானே செய்தேன்!..
    இருந்தாலும் மீண்டும் படிக்கும் போது சுவை கூடுகின்றது..

    ReplyDelete
    Replies
    1. நேற்று நீங்கள் செய்த செய்முறையும் சொல்லி இருக்கலாம். கருத்துக்கு மிக்க நன்றி சார்.

      Delete
    2. பெரும்பாலும் பல்லாரி வெங்காயம் தவிர்த்து - சின்ன வெங்காயம் தான் பயன்பாட்டில்!..

      முதலில் - நறுக்கிய தக்காளி, வெங்காயம் பூண்டு இவற்றை சற்றே வதக்கி விட்டு - ஆறிய பிறகு மசாலா பொடியுடன் மிக்ஸியில் ஒரு சுற்று!..

      கறிவேப்பிலையுடன் தாளித்தால் வேலை முடிந்தது!..

      சாப்பிட உட்கார்ந்தால் - பாத்திரம் காலி!..

      Delete
    3. உங்கள் செய்முறையும் தெரிந்து கொண்டேன். நானும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

      Delete
  3. சூப்பர்ம்மா,,,,,,,,,,,, செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பாருங்கள் மகேஸ்வரி.

      Delete
  4. தக்காளி கூட்டு பார்க்கவே நன்றாக இருக்கு. செய்து பார்க்கிறேன். நன்றிகள்!!.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

      Delete
  5. சாப்பிட ஆவலாய் உள்ளது...சகோ

    ReplyDelete
  6. எடுத்து சாப்பிட்டு இருக்கலாமே சகோ.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி.

    மிகவும் நன்றாய் படங்களுடன் தக்காளி ௬ட்டின் செய்முறையை விவரித்திருக்கிறீர்கள். நானும் அடிக்கடிச் செய்வேன். இருப்பினும் தங்கள் பக்குவம் அருமையாக இருந்தது. அதன்படியும் செய்து பார்க்கிறேன் சகோதரி. பகிர்ந்தமைக்கு நன்றி..

    என் பதிவாக 'முருகன் பதிவு" நேரம் இருப்பின் வருகை தரவும். நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. உங்கள் பக்கத்திற்கும் வந்து கருத்து சொல்லி விட்டேன்.

      Delete
  8. அருமை அம்மா.... செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
  9. வணக்கம்
    அம்மா
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமைசெய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...