பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருட்கள் -
- மட்டன் - 1/4 கிலோ
- கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- சீரக பொடி - 1 மேஜைக்கரண்டி
- சோம்பு பொடி - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
- தயிர் - 2 மேஜைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி தழை - சிறிது
- பட்டை - 1
- கிராம்பு - 2
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- மட்டன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி, சீரகப் பொடி, சோம்பு பொடி சேர்த்து கிளறவும்.
- அதனுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து 5 - 10 நிமிடம் நன்றாக கிளறவும். மட்டனில் இருந்து தண்ணீர் வரும். அதனால் தண்ணிர் சேர்க்க தேவை இல்லை. உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு குக்கரை மூடி வெயிட் வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 20-25 நிமிடங்கள் அல்லது மட்டன் வேகும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறக்கவும். மட்டனில் தண்ணீர் அதிகமாக இருந்தால் தண்ணீர் வற்றும் வரை குக்கர் மூடி போடாமல் கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான மட்டன் தொக்கு ரெடி.
- சோம்பு பொடியை தவிர்க்க வேண்டாம். அது ஒரு நல்ல ருசியை மட்டனுக்கு குடுக்கும்.
- அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், மிளகாய் தூளை கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளவும்.
அருமை.எளிய செயல் முறை விளக்கம்.நன்றி.
ReplyDeleteநன்றி மகேஸ்வரி.
Delete"மட்டன் தொக்கு"
ReplyDeleteமணம் வீசி மணக்கின்றதே!
மருதாணி போல்
கொதித்தே சிவக்கின்றதே!
இறைச்சி பக்குவமாய்
இளஞ்ச்சூட்டில் வேகின்றதே!
இனிய செயல்முறையோ
அதை உரைக்கின்றதே!
அருமை சகோ!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதை வடிவத்தில் கருத்து சொன்ன சகோவுக்கு நன்றி.
Deleteபுகைப்படத்தைப் பார்க்கவும் பசிக்குது எமது அறிவுக்கண்ணை காண வாரீர்.
ReplyDeleteநன்றி சகோ. உங்கள் பக்கத்தையும் பார்த்து கருத்து சொல்லி விட்டேன்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
செய்முறை குறிப்பை வைத்துக் கொண்டு செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தோம், ருசியாக. புகைப்படம் பொருத்தம். அருமை.
ReplyDeleteநன்றி... நன்றி...
ReplyDeleteஇலகுவான முறையில் மட்டன் தொக்கு நன்றி நன்றி !
ReplyDelete