தேவையான பொருட்கள் -
- பரோட்டா - 6
- முட்டை - 3
- சால்னா - 1 கப்
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை -
- பரோட்டாக்களை பிய்த்து வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதனுடன் பிய்த்து வைத்துள்ள பரோட்டா துண்டுகளை சேர்த்து கிளறவும்.
- பிறகு அதன் மேல் சால்னாவை ஊற்றி எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறவும்.
- பிறகு அதன் மேல் முட்டைகளை உடைத்து ஊற்றி 5 - 10 நிமிடம் வரை நன்கு கிளறி கொத்தி விடவும்.
- இறுதியில் மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை தூவி நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கொத்து பரோட்டா ரெடி.
- சால்னாக்கு பதிலாக முட்டை குருமா அல்லது சிக்கன் குழம்பு அல்லது வெஜ் குருமா போன்றவற்றை உபயோகபடுத்தலாம்.
சுவையான கொத்து பரோட்டா... நன்றி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteநான் அவ்வளவாக பரோட்டா சாப்பிடுவதில்லை.. என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தமானது.. தஞ்சையில் நல்ல கடைகளில் இருந்து பரோட்டா வாங்கி வந்து வீட்டிலேயே இப்படி செய்வது வழக்கம்..
ReplyDeleteபதிவைக் கண்டதும் - நினைவுகள் மலர்ந்தன..
வாழ்க நலம்..
பொதுவாக பிள்ளைகளுக்கு தான் பரோட்டா மிகவும் பிடிக்கும். கருத்துக்கு மிக்க நன்றி சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் சுவையான கொத்து பரோட்டா... பார்த்தவுடன் பசி வந்து விட்டது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் பசி வந்ததால் எடுத்து சாப்பிட்டு இருக்கலாமே !
ReplyDeleteஉழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
ReplyDeleteஇனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDeleteவாகாய் அளித்த பரோட்டா செயல்முறை
ReplyDeleteஆகா அருமை சுவை !
எனக்கு பிடித்த உணவு நினைவூட்டியமைக்கும் செய்முறைக்கும் நன்றிகள் இனிய வாழ்த்து !
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.
Deleteகண்டிப்பாக வருகிறேன்
Deleteநேரமிருப்பின் இங்கேயும் வந்து போங்கள் நன்றி !
http://akkinichsuvadugal.blogspot.com/2015/04/blog-post.html
ஆஹா முதல் போட்டோவே ஆசையை தூண்டி விட்டது சகோ.
ReplyDeleteஆசை தீர செய்து சாப்பிடுங்கள் சகோ.
Deleteபரோட்டா சாப்பிட்டா..ஆபத்துன்னு எல்லோரும் ரெக்கை கட்டி பதிவிடும்போது தாங்கள் தாங்கள் கொத்து பரோட்டா செய்முறை பதிவிட்டு இருக்கிறீர்கள். இதைத்தான் அக்கரைக்கு இக்கரை பச்சை என்பதோ....????
ReplyDeleteமாதம் ஒரு தடவை இதே முறையில் செய்து சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது என்று நினைக்கிறேன். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete