பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
அரைக்க -
- தேங்காய் துருவல் - 25 கிராம்
- பச்சை மிளகாய் - 1
- சின்ன வெங்காயம் - 10
- சீரகம் - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி நறுக்கி
- சின்ன வெங்காயம் - 4
- கறிவேப்பிலை - சிறிது
- பீர்க்கங்காயின் தோலை சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
- புளியை 100 மில்லி தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து கிளறவும். உப்பு சேர்க்கவும். பீர்க்கங்காயில் நீர் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
- பீர்க்கங்காய் வெந்தவுடன் புளித் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.
- பச்சடி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான பீர்க்கங்காய் பச்சடி ரெடி.
அடடே புகைப்படமே அருமை சகோ.
ReplyDeleteவாங்க சகோ கருத்துக்கு மிக்க நன்றி
Deleteமிகவும் பிடித்தது - பீர்க்கங்காய் சாம்பார். பச்சடி என்பது புதிய செய்தி!..
ReplyDeleteகண்டிப்பாக வீட்டில் செய்து சாப்பிடுங்கள் சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteவித்தியாசமான உணவு செய்முறை விளக்கத்துடன் நிச்சயம் செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் கண்டிப்பாக செய்து பாருங்கள்.
Deleteஅழகான படங்களுடன் அருமையான விளக்கம்... நன்றி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteமிகவும் பிடித்தக் காய், தங்கள் குறிப்பிகள் படி அவசியம் செய்து பார்க்கிறேன், அருமைம்மா,
ReplyDeleteஅவசியம் செய்து பாருங்கள் மகேஸ்வரி.
Deletetempting pachadi.inviting.
ReplyDeleteThank you Gayathri.
ReplyDeletenice.
ReplyDeleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteபீர்க்கங்காய் பச்சடி படங்கள் அருமை. இதில் சாம்பார் ௬ட்டு செய்வேன். இந்த வகை புதிது. சுவை அருமையாயிருக்குமென நினைக்கிறேன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி. அவசியம் செய்து பார்க்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.