பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 1
- மிளகாய் வத்தல் - 4
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும் .
- அடுப்பில் கடாயை வைத்து 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தலை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
- அதே கடாயில் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறிய பிறகு அதனுடன் வறுத்த மிளகாய் வத்தல், மல்லித்தழை, உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
- சுவையான வெங்காய காரச்சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
வணக்கம்
ReplyDeleteசாப்பிட அவசரம் என்றால் இலகுவில் செய்து சாப்பிடும் உணவு... செய்முறை விளக்கத்துடன் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஆஹா காரம் எனக்கு பிடிக்குமே ஆகவே எடுத்துக்கொண்டேன்.
ReplyDeleteவாங்க சகோ சட்னி எடுத்துக்கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவெங்காய காரச்சட்னி!..
ReplyDeleteநினைக்கும் போதே - சுவையாக இருக்கும்..
வாழ்க நலம்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
ReplyDeleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteபடங்களும் பதிவுமாய், வெங்காய காரச் சட்னி பிரமாதம். பார்க்கும் போதே அதன் சுவை நாக்கில் தெரிகிறது. இட்லி, தோசை,ஏன் சாதத்தில் ௬ட கலந்து சாப்பிடலாம். நானும் அவ்வப்போது செய்வேன். தங்கள் செய்முறைப்படி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
என் பதிவுக்கும் வரலாமே. காத்திருக்கிறேன்.நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வாங்க சகோதரி தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. கண்டிப்பாக செய்து பாருங்கள். உங்கள் தளத்திற்கும் வந்து கருத்து சொல்லி விட்டேன்.
Deleteவீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நாளை செய்து தருவதாக சொன்னார்கள்...
ReplyDeleteநன்றி...
கண்டிப்பாக செய்து சவைத்து மகிழுங்கள்.
Deletewish to have with idli.
ReplyDeleteThank you Gayathri.
Deleteகாரசட்னி சூப்பர். புகைப்டங்கள் அத்துனையும் அருமை.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி.
ReplyDeleteசட்னியின் ருசி அருமை வாழ்த்துகள்
ReplyDeleteSuper aa irukku mam
ReplyDelete