பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- காலிபிளவர் - 1
- மைதா மாவு - 50 கிராம்
- கார்ன் ப்ளோர் - 25 கிராம்
- அரிசி மாவு - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- சிவப்பு புட் கலர் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
- காலிபிளவரை நன்றாக கழுவி பூவாக பிரித்தெடுத்துக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்தவுடன் அதில் காலிபிளவரை போட்டு அடுப்பை அணைத்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விடவும்.
- மைதா மாவு, கார்ன் ப்ளோர், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு புட் கலர், மிளகாய் தூள், உப்பு எல்லாவற்றையும் கலந்து அதனுடன் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து அதில் காலிபிளவரை போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காலிபிளவர் துண்டுகளை போடவும்.
- இரு புறமும் திருப்பி விட்டு காலி பிளவர் வேகும் வரை பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
- மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான காலி பிளவர் ப்ரை ரெடி.
வணக்கம்
ReplyDeleteஎன்ன செய்முறை விளக்கத்துடன் சுவையான உணவு தயாரிப்பு அசத்தல்..
பார்த்தவுடன் எப்போதுதான் செய்து சாப்பிடுவோம் என்ற ஏக்கம்... நாவில் எச்சி ஊறுகிறது.. பகிர்வுக்கு நன்றி.. கடையில் இருக்கும் என்றால் வாக்கி சாப்பிடலாம்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் பதிவு வெளியிட்டதும் உடனே வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅருமை. வீட்டில் செய்கிறார்கள் ஆனால் இதைப்போல் செய்யச்சொல்ல வேண்டும்....
ReplyDeleteவாங்க சகோ வீட்டில் கண்டிப்பாக செய்ய சொல்லி சவைத்து மகிழுங்கள்.
Deleteஅழகாக பக்கோடா போல இருக்கிறது எல்லோருக்கும் வேண்டும் என்பதால் இரண்டு பீஸ் எடுத்துக்கொண்டேன். நன்றி.
ReplyDeleteவாங்க சகோ இரண்டு பீஸ் எடுத்து சாப்பிட்டு இருக்கீங்க ! நன்றாக இருந்த்ததா ?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதட்டில் வைத்து பரிமாறியதும் காணாமல் போய்விடும் ஸ்நாக்ஸ் "காலிபிளவர் பகோடா"
ReplyDeleteபிடித்தமான வகையறா!
ஆஹா!
நட்புடன்,
புதுவை வேலு
வாங்க சகோ இந்த ஸ்நாக்ஸ் உங்களுக்கு பிடிக்கும் என்று கருத்து மூலம் தெரிந்து கொண்டேன். கருத்துக்கு நன்றி.
Deleteகாலிபிளவர் பகோடா சூப்பர்... செய்முறைக்கு நன்றி அம்மா...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteமிகவும் பிடித்தமானது - காலி ஃபிளவர்.. இனிய சிற்றுண்டி - காலிஃபிளவர் பகோடா.. பகிர்வினுக்கு மகிழ்ச்சி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
ReplyDeletesuper ...looking delicious akka
ReplyDeleteThank yoy sangeetha.
ReplyDeleteஎனக்கு பிடிக்கும், செய்ய தேரியாமல் இருந்தேன். இப்ப ஓகே, செய்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteகாலிஃபிளவர் பக்கோடா செய்முறை விளக்கத்துடன் நன்கு உள்ளது.பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது. நானும் இது போல் செய்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.
தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
கார்ன் ப்ளோர் . அப்படினா என்ன
ReplyDelete