Friday, March 27, 2015

தக்காளி ரசம் / Tomoto Rasam


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி - 2
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. மல்லித்தழை - சிறிது 
  6. கறிவேப்பிலை - சிறிது 
                                                                                                    
அரைக்க -
  1. மிளகு - 1 மேஜைக்கரண்டி 
  2. சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
  3. பூண்டுப்பல் தோலுடன் - 6                          
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. கடுகு - 1/2 தேக்கரண்டி 
செய்முறை -
  1. முதலில் தக்காளியை கையால் மசித்து வைக்கவும். பிறகு தக்காளியுடன் 300 மில்லி தண்ணீர், மஞ்சள்தூள், காயத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 
                                                           
                                                                                                   
  2. மிளகு, சீரகம், பூண்டுப்பல் மூன்றையும் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
                                                                                    
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய்வத்தலை போடவும். பிறகு கடுகு போடவும்.
  4. கடுகு வெடித்தவுடன் தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம், பூண்டு கலவையை சேர்த்து கிளறி அதனுடன் தக்காளி கரைசலை ஊற்றவும். ரசம் நுரை கூடி வரும் பொழுது மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.                                                                                     
  5. பிறகு ரசத்தை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான தக்காளி ரசம் ரெடி.

17 comments:

  1. வணக்கம்


    செய்முறை விளக்கத்துடன் சமையல் அசத்தல் நிச்சயம் விளக்க குறிபை வைத்துக்கொண்டு செய்து பார்க்கிறோம்... நாவில் எச்சி ஊறுகிறது....ஆகா....ஆகா... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாங்க ரூபன் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. அருமை தக்காளி ரசம்.
    நான் வருவதற்க்கு முன் ரூபன் வந்து ரசத்தை குடித்து விட்டார் போலயே...

    ReplyDelete
    Replies
    1. தக்காளி ரசத்தின் சுவை நன்றாக இருந்திருக்கும் போல ! அதனால் தான் ரூபன் ரசம் முழுவதையும் குடித்திருப்பார். நீங்கள் வீட்டில் செய்து சவைத்து சாப்பிடுங்கள் சகோ.

      Delete
  4. அருமை.. செய்முறைக் குறிப்பு விளக்கமாக உள்ளது.. மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  5. ஆகா...! அருமையாக செய்து உள்ளீர்கள்... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  6. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  7. புளி இல்லாத தக்காளி ரசம் வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்த்து சொல்லுகிறேன்.

    ReplyDelete
  8. வாங்க மனோ அக்கா தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள். சுவை நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  9. வித்தியாசமான ரசம்...
    அருமை அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வைகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார்.

      Delete
  10. ரசம் கமகமன்னு மணக்கிறது சகோ...

    ReplyDelete
  11. வாங்க சகோ கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. அருமை. ஈ புத்தகமா போட்டா எல்லோரும் தெரியாதவங்களும் பார்த்தே செய்துடலாம்....

    ReplyDelete
  13. தக்காளி ரச வாசனை இங்க வரை தூக்குது....

    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரி.!

    தக்காளி ரசம் செய்முறையுடன் நன்றாக இருக்கிறது.மிளகு சீரகம் மட்டும் கலந்துள்ளதால், மிகுந்த வாசனையுடன் இருக்கும் என நினைக்கிறேன்.
    அவசியம் இம்முறைப்படி செய்து பார்க்கிறேன். நன்றி.

    ஒரு சந்தேகம்.. பூண்டு தோலுடன் உபயோகபடுத்தலாமா.? தோல் வயிற்று வலியை உண்டாக்குமென கேள்வி பட்டுள்ளேனே.!

    தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...