Friday, March 6, 2015

அசோகா அல்வா / Ashoka Halwa

நான் வலைபூ ஆரம்பித்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 231 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளை பார்த்து கருத்துக்களை சொன்ன நட்புள்ளங்களுக்கும்,  சில பதிவுகளை செய்து பார்த்து கருத்துக்களை சொன்ன நட்புள்ளங்களுக்கும் எனது வலைப்பூவை மென்மேலும் வளர செய்த உங்கள் அணைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாம் ஆண்டு தொடக்கத்திற்கு அசோகா அல்வா ஸ்வீட் பதிவு !!!
தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 100 கிராம் 
  2. சீனி - 300 கிராம் 
  3. கோதுமை மாவு - 2 மேஜைக்கரண்டி 
  4. நெய் - 50 கிராம் 
  5. முந்திரிப் பருப்பு - 10 
  6. அல்வா கலர் (ப்ரவுன் கலர்) - 1/4 தேக்கரண்டி
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
  2. பிறகு அதே கடாயில் பாசிப்பருப்பை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் வறுத்த பருப்பு மற்றும் 300 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பருப்பு நன்றாக வெந்ததும் அடுப்பை அனைத்து விட்டு பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.  
  4. அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன் கோதுமை மாவை சேர்க்கவும். வாசம் வரும் வரை கைவிடாமல் கிளறவும்.
  5. பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, பாதி அளவு நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
  6. அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது  சீனி, கலர்  பவுடர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும். 
  7. அல்வா பவுடர் கிடைக்காவிட்டால் கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம். சீனி நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும்.
  8. பிறகு மீதமுள்ள நெய், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான அசோகா அல்வா ரெடி.

41 comments:

  1. மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவுக்கு எல்லோரையும் அழைத்து ''அல்வா'' கொடுத்துள்ளீர்கள் இது திட்டமிட்டதுபோல் இருக்கிறது....
    மென்மேலும் வளர்ந்து சிறப்பான பதிவுகளை சுவையோடு தொடர்ந்து தரவேண்டி வாழ்த்துகிறேன்

    வாழ்க வளமுடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு....வாழ்த்துக்கள் சகோ. அசோகா
    அல்வாவை செய்து பார்க்கத்தூண்டும் செய்முறை விளக்கத்திற்கு நன்றி.
    வாழ்க வளமுடன். சாய்ராம்.

    என் பக்கம் - சீரக ரசம்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ. உங்கள் பக்கத்துக்கு உடனே வருகிறேன்.

      Delete
  3. வாழ்த்துக்கள் சாரதாம்மா..
    இன்னும் பலநூறு குறிப்புகள் தரவேண்டும்.
    அசோகா அல்வா திருமண விருந்துகளில் சுவைத்ததுண்டு.
    உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்.
    படம் பார்க்கவே நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஷமி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

      Delete
  4. மூன்றாம் ஆண்டு தொடங்குகின்றதா.. நல்வாழ்த்துக்கள்!..

    மேலும் பல பதிவுகளைத் தந்து சிறப்பெய்த வாழ்த்துகின்றேன்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  5. கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார். தொடர்ந்து வருகை தாருங்கள்

    ReplyDelete
  6. மூன்றாம் ஆண்டு தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் அம்மா...
    இன்னும் நிறைய எழுதுங்கள்.
    இரவே வாசித்தேன். கடந்த ஒரு வாரமாக பையனுக்கு காய்ச்சல்... நேற்றிலிருந்து மதுரையில் மருத்துவமனையில் ... டைபாய்டாம்... இப்போ பரவாயில்லை... அதனால்தான் ஒரு வாரமாக முகநூல் மற்றும் பிளாக்கில் வரவில்லை. உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன் அம்மா...

    ReplyDelete
  7. வாங்க குமார் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி. உங்களுடைய பையன் பூரண குணமடைய கடவுளிடம் பிராரத்தனை பண்ணிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி.
    மென்மேலும் பல பயனுள்ள பதிவுகள் வழங்க வாழ்த்துக்கள்.
    திட்டமிட்டு எல்லோருக்கும்அல்வா கொடுத்ததைபோல் அல்லவா இருக்கு !!!!! அருமை....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  9. வாழ்த்துகள்,,,,,,,,,,,, எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரே இனிப்பு இது தான், கொஞ்சம் பார்சல் ப்ளீஸ், தொடருங்கள், தோடர்கிறேன், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கு பார்சல் அனுப்பிட்டா போச்சு.

      Delete
  10. நல்வாழ்த்துக்கள் அக்கா. அசோகா அல்வா சூப்பர்.தொடர்ந்து அசத்துங்க அக்கா. உங்க வலைப்பூவில் பகிர்ந்த குறிப்புக்கள் அனைத்துமே அருமையான அனுபவப்பூர்வமான பகிர்வு தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆசியா உங்கள் வருகையும், கருத்தையும் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      Delete
  11. வலைப்பூவில் இரண்டாண்டு நிறைவு செய்தமைக்கு பாராட்டுகள். பலமுறை திருவையாறு சென்றுள்ளேன். அல்வா ருசித்துள்ளேன். தற்போது தங்களின் பதிவுமூலமாக மறுபடியும் ருசித்தேன்.

    ReplyDelete
  12. முதல் வருக்கைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  13. மூன்றாமாண்டு காலடி எடுத்து வைக்கும் தாங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
    மென்மேலும் பல குறிப்புக்கள் தந்து அசத்துங்கள் அம்மா...
    அல்வா செய்முறை அருமை...
    அம்மா வீட்டுக்கு போயிருந்தேன் அதான் வலைப்பூ பக்கம் வரவில்லை,வந்தவுடன் எல்லா பதிவையும் பார்த்துவிட்டேன்..
    அனைத்தும் நன்றாக இருந்தது...

    நன்றி
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  14. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சரிதா. அம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக பொழுதை களித்திருப்பீங்க என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. அல்வாவைப்பார்த்தாலே அருமையாக இருக்கும் போலத்தெரிகிறது! அவசியம் செய்து பார்க்கிறேன்!

    வலைத்தளத்தின் மூன்றாவது பிறந்த நாளிற்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சாரதா!!


    ReplyDelete
  16. மனோ அக்காவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. வணக்கம் சகோதரி.!

    தங்களின் வலைத்தள மூன்றாமாண்டின் தொடக்கத்திற்கு இனிப்பான ஸ்வீட்டுடன் அமர்க்களபடுத்தியிருக்கிறீர்கள்.! மூன்றாமாண்டின் துவக்கத்திற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    படங்களுடன் செய்முறை விளக்கமாக அசோகா அல்வா பிரமாதமாக உள்ளது. என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள்.
    இனி தொடர்ந்தால் மகிழ்வடைவேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete

  18. வாங்க சகோதரி முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  19. வணக்கம்

    இரண்டாம் ஆண்டு நிறைவில் வாசகர்களுக்கு அல்வா பரிசாக கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் நாளுக்கு நாள் புதிய பதிவுகள் வளர்ந்து பல ஆண்டுகள் தொடர்ந்து பல ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்... தங்களின் பக்கம் வருவது முதல் முறை இனி என் வருகை தொடரும்....

    வானம் நீண்ட பரந்த வெளி அந்த பரந்த வெளியில் நாம் எல்லோரும் சிறு துகல்கள்.
    தங்களின் ஒவ்வொரு பதிவையும் இரதம் இரதமாக வைக்கப்படும்போது.
    அந்த நீண்ட பரந்த நீலவானம் உங்கள் கையில் ஒரு நாள் வசமாகும்.. அதுதான் அந்த மகிழ்ச்சி அதுவரை தொடர்ந்து எழுதுங்கள் வெற்றி நிச்சயம்..

    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-8:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள். நானும் உங்கள் கவிதை படைப்புகளை வாசிக்க தொடர்ந்து வருகிறேன்.

      Delete
  20. இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
    அசோகா ஹல்வா சூப்பர். அல்வாகலர் ப்ரவுன் ன்னு சொல்லி இருக்கீங்க கேசரி பொடி தானே?

    ReplyDelete
  21. ஜலீலா உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
    எங்கள் ஊரான திருநெல்வேலியில் அல்வா பிரபலமாக இருப்பதால் அல்வா கலர் என்று தனியாக பிரவுண் கலரில் கிடைக்கும். கிடைக்காத இடங்களில் கேசரி கலர் உபயோகித்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  22. அசோகா அல்வா கோதுமை மாவில் மட்டுமே செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். அதில் பாசிப்பருப்பும் போடுவார்கள் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். அவசியம் செய்து பார்க்கிறேன். நன்றி சாரதா!

    ReplyDelete
  23. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள் கலையரசி !

    ReplyDelete
  24. அசோகா ஹல்வா செய்முறையை படித்ததுமே சாப்பிட்ட உணர்வு.

    ReplyDelete
  25. தங்களது அசோகா ஹல்வா செய்முறையை படித்ததுமே சாப்பிட்ட உணர்வு.செய்து பார்த்தோம். சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      Delete
  26. Vazhthukkal mam. Ashoka oru arumaiyana dish

    ReplyDelete
  27. Its looking so delicious mam. Surely we will try thanks for your halwa

    ReplyDelete
  28. My mother-in-law whenever comes to see my wife and grandchild, she used to bring Asoka Halwa. anyway nice.

    ReplyDelete
  29. LIKE RAVA KESARI IT IS EASY TO PREPARE ASOKA HALWA.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...