Monday, March 23, 2015

பூசணிக்காய் சாம்பார் / Pumpkin Sambar


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான  பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 100 கிராம் 
  2. பூசணிக்காய் - சிறிய துண்டு 
  3. தக்காளி - 1
  4. சாம்பார் பொடி - 2 மேஜைக்கரண்டி 
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. புளி - சிறிது 
  7. மல்லித்தழை - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு 
                                                                                   
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு -  1/2 தேக்கரண்டி 
  4. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. சின்ன வெங்காயம் - 5
  6. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பூசணிக்காயை தோல் சீவி விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாகவும், சின்ன வெங்காயத்தை நீள வாக்கிலும் வெட்டி வைக்கவும்.                                                                                     
  2. புளியை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து பிறகு கரைத்துக் கொள்ளவும். 
  3. பருப்பை நன்கு கழுவி குக்கரில் பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  4. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்திருந்து பிறகு அடுப்பை அணைக்கவும்.
  5. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து பருப்பை நன்கு மசித்து வைக்கவும்.
                                                                               
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
  7. கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகள், தக்காளி மற்றும் உப்பு  சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.                                  
  9. பிறகு அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு புளித்தண்ணீர்  மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.            
  10. மசாலா வாடை அடங்கியதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.          
  11. இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பூசணிக்காய் சாம்பார் ரெடி.                                                                                   
         

20 comments:

  1. கிணற்று நீரை இறைத்து ஊற்றி தோட்டத்தில் பூசனிக்கொடி வளர்த்து - மார்கழிக் கோலத்தில் பூக்கள் வைத்து அழகு பார்த்த நாட்கள்..

    விளைந்த பூசனிக்காயைப் பறித்து சாம்பார் வைத்து சாப்பிட்ட நாட்கள்!..
    எல்லாம் நினைவுக்கு வருகின்றனவே!..

    ReplyDelete
    Replies
    1. மலரும் நினைவுகளை மனதில் நினைத்து கருத்து சொல்லி இருக்கீங்க ! முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  2. புகைப்படங்களே அருமை மதிய உணவுக்கு எடுத்துக்கொண்டேன்.
    சகோ நலம்தானே நம்ம வூட்டாண்டே காணோமே.... 3 படம் ஓடி தியேட்டர் மூடும் நேரம்.

    ReplyDelete
  3. சாரி சகோ கொஞ்சம் பிஸி உங்கள் பக்கம் வந்து கருத்து சொல்லி விட்டேன்.

    ReplyDelete
  4. சிறப்பான சாம்பார் ! பூசணிக்காய் என்பது அல்லவா? நீங்கள் படத்தில் காண்பித்திருப்பது பரங்கிக்காய் ஆயிற்றே? பரங்கிக்காயை சிலர் மஞ்சள் பூசணி என்பார்கள். நீங்களும் அது போல எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரி தான் அக்கா. எங்கள் ஊரான பாளையங்கோட்டையில் இதை மஞ்சள் பூசணி என்று தான் சொல்வோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  5. படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன் கருத்துக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

      Delete
  7. படங்களுடம் ஒவ்வொரு விளக்கமும் அருமை... செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பாருங்கள் சார்.

      Delete
  8. சமைத்து
    மணிக்கணக்காய் ஆனாலும்
    பூசணிக்காய் சாம்பார்
    பூப் போல மணக்கிறதே!

    படைத்த விதமும்,
    படையலிட்ட விதமும்
    வெகு சிறப்பு

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  9. கவிதையாக கருத்து தந்த சகோவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. அருமையான சாம்பார். பூசணி சாம்பார் செய்வதில்லை என்று இருந்தேன். இனி செய்கிறேன். சூப்பர்.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி.

    ReplyDelete
  12. பரங்கிக்காயில் சாம்பார் புதுமையாக இருக்கிறது.
    முயற்சி பண்ணுகிறேன் சகோ.நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...