Tuesday, March 17, 2015

சீனிக்கிழங்கு சிப்ஸ் / Sweet Potato Chips


தேவையான பொருள்கள் -
  1. சீனிக்கிழங்கு பெரியது - 1
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு 
  4. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. சீனிக்கிழங்கின் தோலை சீவி விட்டு சிப்ஸ் வெட்டும் பலகையில் வைத்து சீவிக் கொள்ளவும்.
                                                                       
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு சீவி வைத்திருக்கும் சிப்ஸ்களை எடுத்து போடவும்.
                                                                       
  3. இரு புறமும் பொன்னிறமானதும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். மீதமுள்ள எல்லா சிப்ஸ்களையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும்.
                                                                      
  4. பிறகு சிப்சுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கையால் எல்லா இடங்களிலும் படும் படி கலந்து விடவும். 
  5. சுவையான சீனிக்கிழங்கு சிப்ஸ் ரெடி. சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.                                                           

26 comments:

  1. சுவையான சிப்ஸ்.... அருமை அருமை...எடுக்க முடியவில்லை....
    நானும் பதிவிட்டு இருக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் பதிவை பார்க்க உடனே வருகிறேன்.

      Delete
  2. சர்க்கரைவல்லிக் கிழங்கில் - இப்படி ஒரு புதிய மொறுமொறு!.. செய்முறையே கலக்கல்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார். வீட்டில் சொல்லி செய்ய சொல்லுங்கள்.

      Delete
  3. வணக்கம்
    சாப்பிடத்தான் சொல்கிறது ஆனால் எடுதுத்து சாப்பிட முடியாது.. செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. காலிபிளவர் மிளகு பொரியல்......இப்போது தான் செய்தேன் சகோ.
    மிக அருமையாக இருந்தது....தொடருங்ககள்...

    ReplyDelete
    Replies
    1. காலி பிளவர் மிளகு பொரியல் செய்து ருசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  5. அடடே ஸூப்பர் ஸிப்ஸ்...
    நலம் தானே ?

    ReplyDelete
  6. வாங்க சகோ கொஞ்சம் லேட்டாக வந்துட்டீங்க போல ! கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் எடுத்து சாப்பிட்டிருக்கலாம்.

    ReplyDelete
  7. சிப்சை ரசித்தோம், ருசித்தோம். நன்றி.

    ReplyDelete
  8. அடடா...! எவ்வளவு அழகாக செய்து உள்ளீர்கள்...

    படங்களுடன் விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  9. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இன்றைய வலைச்சரத்தில் என்னுடைய பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி சகோ. வலைச்சரத்திற்கு வந்து கருத்து கொடுத்து விட்டேன் சகோ.

      Delete
  10. வணக்கம் சகோதரி.!

    அழகான படங்களுடன், உடனே சாப்பிடத் தூண்டும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்முறை மிகவும் அற்புதமாக பதிவாக்கி உள்ளீர்கள், படங்களை பார்த்ததுமே அதன் மொறு மொறுப்புச்சுவை நாவில் தெரிகிறது. செய்து விடுகிறேன் . பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரி..

    இந்த வார வலைச்சர அறிமுகத்துக்கு என் அன்பான வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்கிறேன்...

    வலைத்தளத்தில் என் பதிவாக, சிறுகதை "ஒரு தீயின் ஆரம்பம் ".. முடியும் போது வந்து படித்து கருத்திடவும்.. நன்றி சகோதரி...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன் .

    ReplyDelete
  11. உங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி. விரைவில் உங்கள் பக்கம் வருகிறேன்.

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காஞ்சனா.

    ReplyDelete
  13. சுவையான சிப்ஸ், படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  14. சாரதாம்மா சிப்ஸ் சூப்பர்.
    எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க...
    வேலைபளு காரணமா அடிக்கடி வர முடியவில்லை..அதான் உங்கள் தளத்திற்கு வரலை.

    ReplyDelete
    Replies
    1. ஷமி உங்களுக்கு கண்டிப்பாக பார்சல் அனுப்புகிறேன்.

      Delete
  15. சக்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸா??பார்க்கவே நல்லா மொருமொருன்னு டேஸ்டா இருக்கும்போல....
    விரைவில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...
    காலிப்ளவர் மிளகு பொரியல் செய்தேன் நன்றாக இருந்தது ...

    வாழ்க வளமுடன்.....

    ReplyDelete
  16. சரிதா செய்து பார்த்து கண்டிப்பாக கருத்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  17. சூப்பர் சிப்ஸ்.அருமை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...