பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- சீனி அவரைக்காய் - 100 கிராம்
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- சீரகம் - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- சீனி அவரைக்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சீனி அவரைக்காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- நன்கு வெந்தவுடன் அதிலுள்ள தண்ணீரை வடித்து விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் கரகரப்பாக அரைத்து வைத்துள்ள மிளகாய் வத்தல், சீரக கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு அதனுடன் அவித்து வைத்துள்ள சீனி அவரைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
- இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். பிறகு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான சீனி அவரைக்காய் பொரியல் ரெடி.
ஆகா.. இந்த கொத்தவரங்காயைப் பார்த்தே பல வருடங்களாகின்றன.
ReplyDeleteவிளைவிப்பார் இன்றிப் போனதோ - தெரியவில்லை...
கொத்தவரை பொரியல் - எப்போதுமே அருமை!..
வாழ்க நலம்!..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
Deleteஎனக்கு மிகவும் பிடித்தக் காய், நான் கிடைக்கும் போது செய்வேன். இப்போ நிறைய இங்கு சிடைக்கிறது. பெயர் சீனிஅவரை இப்போ தான் தெரியும். அருமை.
ReplyDeleteகண்டிப்பாக செய்து சுவைத்து பாருங்கள்.
Deleteவணக்கம்
ReplyDeleteஎங்கள் வீட்டில் கூட கொத்தவரைத் தோட்டம் உள்ளது ... எப்போது சாப்பிட ஆசைதான் ஆனால் இல்லை.... தாயகம் சென்றால் நிச்சயம் சாப்பிடலாம் செய்முறை விளக்கத்துடன் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் ஊருக்கு வந்ததும் கண்டிப்பாக செய்து சாப்பிடுங்கள்.
ReplyDeleteசெய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...
ReplyDeleteகண்டிப்பாக செய்து சாப்பிட்டு கருத்து சொல்லுங்கள்.
ReplyDeleteபடங்களே அசர வைக்கிறது அருமை
ReplyDeleteதாமதமான வருகைக்கு ஸாரி.
தாமதமாக வந்தாலும் உங்களுடைய அருமையான கருத்துக்கு மிக்க நன்றி சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteபடங்களே விருந்தாக இருந்தன. செய்முறை விளக்கங்கள் அருமை.
கொத்தவரங்காய் எனக்கு மிகவும் பிடித்தமானக் காய். தற்சமயம் உடல்நிலை கருதி அவ்வளவாக சேர்ப்பதில்லை. ஆனால் தங்கள் பதிவை பார்த்ததும் ஒருமுறை செய்து சாப்பிட தூண்டுகிறது. நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
உடல் நிலையை கவனித்துக்கொண்டு செய்து சாப்பிடுங்கள் சகோதரி.
ReplyDeleteVery nice while I am prepare I thought it may be too spicy....but when we eat it the taste was awesome thank you mam
ReplyDelete