Monday, March 6, 2017

கடலை மாவு லட்டு / Besan Laddu

நான் வலைப்பூ ஆரம்பித்து இன்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 348  பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளை பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும், சில பதிவுகளை செய்து பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நல்ல நாளில் ஈஸியான கடலை மாவு லட்டு ஸ்வீட் பதிவு !!
தேவையான பொருள்கள் -
  1. கடலை மாவு - 1 கப்
  2. சீனி - 3/4 கப்
  3. நெய் - 1/2 கப்
  4. முந்திரிப்பருப்பு - 10
செய்முறை -
  1. சீனி, முந்திரிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் திரித்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைமாவை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
  3. வறுத்த கடலைமாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் ஆற விடவும். நன்கு ஆறிய பிறகு அதனுடன் பொடித்து வைத்துள்ள சீனி, மீதமுள்ள நெய், எல்லாவற்றையும் நன்றாக கலந்து சிறு சிறு லட்டுகளாக பிடிக்கவும்.
குறிப்பு -
  1. உருட்ட வரவில்லை என்றால் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

8 comments:

  1. வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
    கடலை மாவு லாடு சூப்பர்.

    ReplyDelete
  2. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  3. மேலும் மேலும் சிறக்க வேண்டும்..
    நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள். பயத்தமா லட்டு நல்லா இருக்கும். கடலை மா லட்டு எப்படி இருக்கும்னு தெரியலை. முடிந்தால் செய்கிறேன்.

    ReplyDelete
  5. இனிய வாழ்த்துக்கள்!
    கடலை மாவு லட்டு குறிப்பு அருமை!

    ReplyDelete
  6. சிறந்த வழிகாட்டல்
    தின்ன விருப்பம் கூடுதே!

    ReplyDelete
  7. வணக்கம்
    வாழ்த்துக்கள் மேலும் பல பதிவுகள் மலர எனது மனம் உகந்த வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வாழ்த்து சொன்ன அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...