Thursday, May 16, 2013

தேன்குழல் முறுக்கு


தேவையான பொருள்கள் -
  1. புழுங்கல் அரிசி - 2 கப் (400 கிராம்)
  2. வெள்ளை உளுந்து -100கிராம் (பாதியாக உடைத்த வெள்ளை உளுந்து)
  3. பொட்டுக் கடலை - 50 கிராம்
  4. கறுப்பு எள் - 1 மேஜைக்கரண்டி
  5. சீரகம் - 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - 500 மில்லி அல்லது தேவையானஅளவு
செய்முறை -
  1. அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின் அரிசி மற்றும் உப்பை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். நடுநடுவே தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து உளுந்தம் பருப்பை போட்டு லேசாக வறுத்து கொள்ளவும். நன்றாக ஆறியவுடன் மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  4. பொட்டுக் கடலையை மிக்ஸ்யில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  5. அரைத்து வைத்துள்ள அரிசி மாவோடு உளுந்தம் பருப்பு பொடி, பொட்டுக் கடலை பொடி, எள், சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து தேவையான அளவு மாவை எடுத்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழியவும்.
  7. ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து முறுக்கை திருப்பி போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன் அல்லது இரண்டு புறமும் பொன்னிறமாக ஆனவுடன் ஒரு கம்பி கொண்டு முறுக்குகளை எடுத்து வடிதட்டில் போட்டு வைக்கவும். எண்ணெய் நன்றாக வடிந்தவுடன் பரிமாறவும். சுவையான முறுக்கு ரெடி.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...