Tuesday, May 12, 2015

அவல் பாயாசம் / Aval payasam


பரிமாறும்  அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அவல் - 200 கிராம்
  2. ஜவ்வரிசி - 100 கிராம்
  3. காய்ச்சிய பால் - 1/4 லிட்டர் 
  4. அச்சு வெல்லம் - 400 கிராம் 
  5. முந்திரிப்பருப்பு - 10
  6. காய்ந்த திராட்சை - 10
  7. நெய் - 50 கிராம்                                           
செய்முறை -
  1. அவல், ஜவ்வரிசி இரண்டையும் நன்றாக கழுவி  தனித் தனியாக ஒரு தம்ளர் (200 மில்லி) தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.                                         
  2. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பு, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.   
  3. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடி கட்டி வைத்துக் கொள்ளவும்.                
  4. அதே வாயகன்ற பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் அதிலுள்ள தண்ணீரையும்  சேர்த்து 10 நிமிடம் வரை  வேக விடவும்.                     
  5. ஜவ்வரிசி வெந்ததும் அதனுடன் ஊற வைத்த அவலும் அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.                                                                                                              
  6. அவல் வெந்த்ததும் சர்க்கரைப் பாகை ஊற்றவும்.                      
  7.  பாகு சேர்த்து வரும் போது காய்ச்சிய பால், முந்திரி திராட்சை, ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். 
                                                               
  8. சுவையான அவல் பாயாசம் ரெடி. ஜவ்வரிசி சேர்க்காமல் தனி அவலை வைத்தும் அவல் பாயாசம் செய்யலாம்.

26 comments:

  1. அவல், ஜவ்வரிசி தனித்தனியே செய்வோம்....தங்கள் குறிப்பு அருமை ஒரு நாள் செய்து ருசிக்க வேண்டும் சகோ.

    எனது பக்கம் ஆரோக்கிய பானம், வெந்தய மாங்காய் ஊறுகாய் வாருங்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. உங்கள் பக்கத்துக்கும் வந்து கருத்து சொல்லி விட்டேன்.

      Delete
  2. அருமையான சுவையான புதிய வகைக் குறிப்பு. நன்றி.

    ReplyDelete
  3. பாரம்பர்யம் மிக்க அவல் பாயசம்!..

    எளிய செய்முறை.. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. அட இரண்டையுமே சேர்த்து செய்துள்ளீர்கள் நாம் தனித் தனியே தான் செய்வோம் ம்..ம்.ம் சரி இதை நிச்சயம் செய்து பார்க்கிறேன் சகோ!
    தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  5. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    ReplyDelete
  6. நான் 2லுமே செய்ததில்லை.ரவையிலும்,அரிசிலும் தான் செய்துள்ளேன். நீங்க டிபரண்ட் ஆக 2ஐயும் சேர்த்து செய்தது அருமையாக இருக்கு .செய்து பார்க்கிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  7. கண்டிப்பாக செய்து பாருங்கள் பிரியசகி.

    ReplyDelete
  8. வணக்கம்
    அம்மா

    செய்முறை விளக்கத்துடன் அருமையாக சொல்லியுள்ளீர்கள் நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பாருங்கள் ரூபன்.

      Delete
  9. வணக்கம் சகோதரி.

    ஜவ்வரிசி, அவல் பாயாசம் செய்முறை விளக்கம் நல்ல சுவைபட தித்திப்பாக கமகமக்கும் வாசனையுடன் இருந்தது. படங்களும் நன்றாக உள்ளன. நல்லதொரு இனிப்பான உணவை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி. நானும் செய்து பார்க்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  10. ஆஹா பாயாசத்தின் புகைப்படமே அருமை.

    ReplyDelete
  11. ரசித்தேன், ருசித்தேன். அவ்வப்போது எங்கள் வீட்டில் வைக்கப்படுவதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  12. ஜோரான படங்களுடன், தெளிவான செய்முறை குறிப்புகளுடன் அருமையான அவல் பாயஸம் அளித்துள்ளதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  14. தெளிவான புகைப்படத்துடன்,செய்முறை விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...வாழ்த்துக்கள்...
    நானும் செய்து பார்த்து சொல்கிறேன்...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  15. கண்டிப்பாக செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள் சரிதா.

    ReplyDelete
  16. சாரதாம்மா பக்கத்தில் சத்தான ஊணிருக்கும்
    சீரான செய்முறைகள் சேர்ந்திருக்கும் - ஆரமே
    முத்தில் அளித்தாலும் போதாதே ! இச்சுவைக்கு
    இத்தரையே வாழ்த்தும் இனிது !

    அருமை அருமை சாரதாம்மா தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
  17. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீராளன் . தொடர் வருகை தாருங்கள் .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...