Friday, October 26, 2018
Tuesday, October 16, 2018
காலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப்
- சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
அரைக்க -
தாளிக்க -
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
- தேங்காய் துருவல், தக்காளி, சின்ன வெங்காயம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கூட்டு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கூட்டில் சேர்த்து கலக்கி விடவும்.
- சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சுவையான காலிப்ளவர் கூட்டு ரெடி.
Friday, September 28, 2018
பாசிப்பயறு தோசை / Green Gran Dosa / Pesarattu Dosa
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பாசிப்பயறு - 1 கப் ( 200 கிராம் )
- பச்சரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
- உப்பு - தேவையான அளவு
அரைக்க -
செய்முறை -
- பாசிப்பயறு, பச்சரிசி இரண்டையும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிரைண்டரில் அரைத்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- தோசை சுடுவதற்கு முன் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், மிளகாய் வத்தல், சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து மாவில் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து ஊற்றி விரித்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Tuesday, August 14, 2018
பிரட் சில்லி / Bread Chilli
பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் !
தேவையான பொருள்கள் -
- பிரட் துண்டுகள் - 4
- குடமிளகாய் - பாதி
- பட்டர் - 25 கிராம்
- பூண்டு பற்கள் - 2
- மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- வெங்காயத்தை நீள வாக்கிலும், குடமிளகாயை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும். பூண்டுப்பற்களை ஒன்றிரெண்டாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து பட்டரை ஊற்றி சூடு பண்ணிக்கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் பிரட்டை வைத்து சுற்றிலும் பட்டர் ஊற்றி பிரட் மேலும் தேய்த்து விடவும்.
- பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி பிரட் மேலும் தேய்த்து டோஸ்ட் பண்ணிக்கொள்ளவும். எல்லா பிரெட்டையும் இதே போல் டோஸ்ட் பண்ணி சிறிய துண்டுகளாக கட் பண்ணிக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பிரெட் சில்லி ரெடி.
Thursday, July 26, 2018
முட்டை கீமா / Egg Keema
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- முட்டை - 2
- ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பிரிஞ்சி இலை - 1
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- அன்னாசிப்பூ - 1
- பெரிய வெங்காயம் - 1
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். 10 நிமிடங்களில் முட்டைகள் வெந்து விடும்.
- வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும். தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும். பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
- பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல், சேர்க்கவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா ரெடி.
Tuesday, July 24, 2018
வேர்க்கடலை சட்னி இரண்டாவது முறை / Peanut Chutney
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- வறுத்த வேர்க்கடலை - 3/4 கப்
- பொட்டுக்கடலை - 1/4 கப்
- மிளகாய் வத்தல் - 2
- புளி - சிறிய கோலி அளவு
- பூண்டுப்பல் - 1
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
- மிளகாய் வத்தல், புளி இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பூண்டுப்பற்கள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் நன்றாக கலக்கி விடவும்.
- இட்லி, தோசைக்கு சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி.
Subscribe to:
Posts (Atom)