தேவையான பொருட்கள் -
- துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- பூண்டு பற்கள் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
செய்முறை -
- அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே வைக்கவும். அதேபோல் துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
- அடுப்பை அணைத்து விட்டு சூடாக இருக்கும் கடாயில் தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வறுத்து எல்லாவற்றையும் ஆறவிடவும்.
- நன்கு ஆறிய பிறகு அதனுடன் உப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும். பருப்பு துவையல் ரெடி.
- வத்தக்குழம்பு வைக்கும் போது சைட் டிஷ்சாக வைக்கலாம். தயிர் சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
தேவையான பொருள்கள் -
- நெல்லிக்காய் - 10
- மிளகாய் தூள் - 2 மேஜைக்கரண்டி
- கடுகு - 2 மேஜைக்கரண்டி
- வெந்தயம் - 2 மேஜைக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை -
- நெல்லிக்காய்களை நன்கு கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்களில் வெந்து விடும்.
- வெந்த நெல்லிக்காய்களை சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறிய பிறகு கையால் அழுத்தினால் நெல்லிக்காய் சிறு தூண்டுகளாகவும் கொட்டைகள் தனியாகவும் வந்து விடும்.
- அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்து நின்றவுடன் தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் வெந்தயத்தை போட்டு நன்றாக வறுத்து தனியாக வைக்கவும்.
- ஆறிய பிறகு பொடி பண்ணிக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், பெருங்காயத்தூள் போட்டு ஒரு நிமிடம் கிளறி அதோடு நெல்லிக்காய்களை சேர்த்து கிளறவும்.
- பிறகு அதனுடன் கடுகு தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.
தேவையான பொருள்கள் -
- இட்லி அரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
- பச்சரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
- கடலைப்பருப்பு - 3/4 கப் ( 150 கிராம் )
- பாசிப்பருப்பு - 1/4 கப் ( 50 கிராம் )
- நெய் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
- இட்லி அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசியுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். நடுவில் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
- ஆறிய பிறகு மிக்சியில் திரித்துக்கொள்ளவும்.
- அரைத்த மாவுடன் திரித்து வைத்துள்ள பருப்பு மாவு, நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேவையான அளவு மாவை எடுத்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழியவும். இரண்டு நிமிடங்கள் கழித்து முறுக்குகளை திருப்பி போடவும்.
- எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன் அல்லது இரண்டு புறமும் பொன்னிறம் ஆனவுடன் ஒரு கம்பி கொண்டு முறுக்குகளை எடுத்து வடிதட்டில் போட்டு வைக்கவும்.
- எண்ணெய் நன்றாக வடிந்தவுடன் பரிமாறவும். சுவையான மணியாச்சி முறுக்கு ரெடி.