Thursday, December 19, 2013

வாழைக்காய் பொரியல் / Plantain Fry




பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வாழைக்காய் - 1
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு
  4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி                 
 அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. சீரகம் - 1 தேக்கரண்டி                                   
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது                                   
செய்முறை -
  1. முதலில் வாழைக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வாழைக்காய் மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.                                                  
  3. மிளகாய் வத்தல், சீரகம் இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும். சிலருடைய மிக்சியில் அளவு கம்மியாக இருப்பதால் அரைக்க முடியாது. அதற்கு பதிலாக 1/2 தேக்கரண்டி மிளகாய் தூளும், 1 தேக்கரண்டி சீரகத்தூளும் சேர்த்து செய்யலாம்.                                         
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வேக வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறவும்.                                  
  6. இறுதியில் அரைத்து வைத்துள்ள கலவை, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.                                   

பிசி பேலா பாத்/ Bisi Bela Bath

                         
பரிமாறும் அளவு  - 4 நபருக்கு

தேவையான பொருட்கள் -
  1. அரிசி - 200 கிராம் 
  2. துவரம் பருப்பு - 100 கிராம்
  3. கேரட் - 1
  4. பட்டாணி - 1/2 கப் 
  5. பீன்ஸ் - 15
  6. உருளைக்கிழங்கு - 1
  7. பெரிய வெங்காயம் - 1
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. வெல்லம் - சிறிது 
  10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - சிறிது
  12. உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வற்றல் - 5
  2. கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
  3. பட்டை - 2
  4. கிராம்பு - 4
  5. கச கசா - 1 மேஜைக்கரண்டி
  6. உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  7. கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  8. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி                     
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. நெய் - 1 மேஜைக்கரண்டி
  4. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  5. மிளகாய் வற்றல் - 1
செய்முறை -
  1. அரிசியை நன்றாக கழுவி 500 மில்லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். 
  2. கேரட், உருளைக்கிழங்கை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பீன்ஸ், வெங்காயம் ஆகியவற்றை நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.             
  3. குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த பட்டாணி உபயோகபடுத்தினால் முதல் நாள் இரவே ஊற வைத்திருக்க வேண்டும்.                                                                       
  4. புளியை சிறுது தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். 
  5. அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, கச கசா, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
  6. வறுத்தவற்றை ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு அடிகனமான பாத்திரத்தில் மிக்சியில் உள்ள கலவை, புளி தண்ணீர், வெல்லம், உப்பு, கறிவேப்பில்லை அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும். 
  8. கொதித்ததும் வேக வைத்த பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சாம்பார் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. 5 நிமிடம் நன்றாக கொதித்ததும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் மறுபடி கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். 
  10. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய், நெய் ஊற்றவும். பிறகு கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
  11. தாளித்ததை சாதத்தில் சேர்த்து கிளறவும். சுவையான பிசி பேலா பாத் ரெடி. தயிர் பச்சடி, அப்பளத்துடன் பரிமாறலாம்.
குறிப்புகள் -
  1. வறுத்து அரைப்பதற்கு பதிலாக 3 மேஜைக்கரண்டி ரெடிமேட் பிசி பேலா பாத் பொடி வைத்தும் செய்யலாம். 

Friday, December 13, 2013

சிறுகிழங்கு பொரியல் / Sirukilangu Poriyal

                                     

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிறுகிழங்கு - 200 கிராம் 
  2. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  3. சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு                            
     தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. பச்சை மிளகாய் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது                                   
செய்முறை -
  1. முதலில் சிறுகிழங்கை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து  4 அல்லது 5 தடவை நன்றாக கழுவிக் கொள்ளவும். ஊற வைப்பதால் சிறுகிழங்கிலுள்ள மண் நன்றாக போய் விடும்.
  2. குக்கரில் கழுவிய சிறு கிழங்கு மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் கிழங்குகளை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  3. நன்றாக ஆறிய பின் கிழங்குகளை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள சிறுகிழங்கு துண்டு, உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.                                            
  6. இறுதியில் சீரகத்தூள், தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சிறுகிழங்கு பொரியல் ரெடி.

மட்டன் பிரியாணி / Mutton Biriyani - 1

       

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அல்லது சீரக சம்பா அரிசி - 2 கப்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. மட்டன் - 250 கிராம்
  5. கொத்தமல்லி தழை மற்றும் புதினா - 1/2 கப்
  6. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  7. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  10. தயிர் - 2 மேஜைகரண்டி
  11. எலும்பிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
  12. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. இஞ்சி - 1 இன்ச் அளவு
  2. பூண்டு - 6
  3. பச்சை மிளகாய் - 2
  4. பட்டை - 2
  5. கிராம்பு - 2
  6. சோம்பு - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க -

  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. நெய் - 3 மேஜைக்கரண்டி
  3. பட்டை - 2
  4. கிராம்பு - 2
  5. பிரிஞ்சி இலை - 2
  6. சோம்பு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. மட்டன், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு , தயிர், எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. வெங்காயம், தக்காளியை பொடிதாக நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லி தழை, புதினாவை சிறியதாக வெட்டி கொள்ளவும்.                                  
  3. அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.                                                   

  4. குக்கரில் ஊற வைத்த மட்டன் கலவை மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு போட்டு தாளிக்கவும்.
  6. பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
  7. தக்காளி வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து கிளறவும்.
  8. அதன் பின் வேக வைத்த மட்டன் கலவையை சேர்த்து கொதிக்க விடவும். மட்டன் வேக வைக்கும் போதே ஒரு கப் தண்ணீர் சேர்த்ததால் இப்பொது 3 கப் தண்ணீரை சேர்க்கவும். (2 கப் அரிசிக்கு மொத்தம் 4 கப் தண்ணீர்)                                             
  9. கொதி வந்தவுடன் அரிசியை போட்டு கிளறி விட்டு உப்பு சரி பார்த்து பாத்திரத்தை மூடி விடவும். தீயை குறைத்து கொள்ளவும்.
  10. 10 - 15 நிமிடம் வரை கொதித்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும். அடி பிடிக்காமல் இருக்க நடுவில் ஓரிரு முறை மெதுவாக கிளறி விடவும். அடிக்கடி மூடியை திறந்து கிளற வேண்டாம். 
  11. அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி விடவும். கொத்தமல்லி தழையைத் தூவி பரிமாறலாம்.

Thursday, December 12, 2013

சிக்கன் 65 / Chicken 65

                                             

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிக்கன் - 100 கிராம் 
  2. சிக்கன் 65 மசாலா - 2 மேஜைக்கரண்டி 
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
  4. தயிர் - 3 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - 1/4 தேக்கரண்டி 
  6. பொரிப்பதற்கு எண்ணெய் - 100 கிராம் 
  7. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிக்கன், சிக்கன் 65 பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.                                     
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் சிக்கன் துண்டுகளை போடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும். நன்கு மொறுகலாகும் வரை திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.                                                 
  3. மீதமுள்ள எல்லா சிக்கன் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். அதே எண்ணெயில் சிறிது கறிவேப்பிலையை பொரித்து சிக்கன் துண்டுகள் மேல் போடவும்.
  4. எண்ணெய் நன்கு உறிஞ்சிய பிறகு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். சுவையான சிக்கன் 65 ரெடி.

Wednesday, December 11, 2013

குழந்தைகளுக்கான முட்டை மிளகு பிரட்டல் / Kid's Egg pepper fry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான  பொருள்கள் -
  1. முட்டை - 2     
  2. மிளகு - 1 தேக்கரண்டி
  3. உப்பு - 1/4 தேக்கரண்டி
  4. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி                      
செய்முறை -
  1. முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.
  2.  ஆறியவுடன் தோலுரித்து துருவியில் வைத்து  துருவிக் கொள்ளவும்.                      
  3. அடுப்பில்  கடாயை  வைத்து  எண்ணெய்  ஊற்றி  சூடானதும்  மிளகுத் தூள், உப்பு  போட்டு ஒரு  நிமிடம் கிளறவும்.
  4. பிறகு முட்டை துருவலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி. இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷாக கொடுக்கலாம். அல்லது சாண்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.

தக்காளி குருமா / Tomato Kuruma


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி - 2
  2. மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
  3. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  4. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  5. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  2. சின்ன வெங்காயம் - 4
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. வெங்காயம் - 1
  3. கறிவேப்பிலை - சிறிது
     செய்முறை -
  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. தேங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு எண்ணையை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும்  கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும். 
  4. பச்சை வாடை போனதும் தக்காளியை போட்டு வதக்கவும். நன்கு சுருள வதங்கியதும் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  5. தக்காளி தண்ணீர் விடுவதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. தேவைப்பட்டால் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  6. இறுதியில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான தக்காளி குருமா ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Monday, December 9, 2013

கோதுமை அப்பம் / Wheat appam


தேவையான பொருள்கள் -
  1. கோதுமை மாவு - 200 கிராம் 
  2. அரிசி மாவு - 100 கிராம் 
  3. அச்சு வெல்லம் - 150 கிராம் 
  4. சோடா உப்பு - 1 தேக்கரண்டி 
  5. பொரிப்பதற்கு எண்ணெய் - 200 கிராம்
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும்.
  2. அச்சு வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. வடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு தடவைக்கு நான்கு அப்பங்கள் வீதம் ஊற்றவும்.
  5. ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும் வரை பொரித்து சிவந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
  6. மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான கோதுமை அப்பம் ரெடி.

Thursday, November 28, 2013

கார்த்திகை கொழுக்கட்டை

 
தேவையான பொருள்கள் -
  1. பச்சரிசி மாவு - 200 கிராம் 
  2. அச்சு வெல்லம் - 100 கிராம்
  3. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  4. எள் - 1 மேஜைக்கரண்டி 
  5. ஏலக்காய் - 1 தேக்கரண்டி 
  6. நெய் - 1 மேஜைக்கரண்டி
     செய்முறை -
  1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எள்ளை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி தேங்காய் துருவலை வறுத்துக் கொள்ளவும்.
  3. அச்சு வெல்லத்தை 100 மில்லி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் தேங்காய் துருவல், எள், ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் கலந்து வெல்ல பாகை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  5. உருட்டி வைத்துள்ள மாவில் ஒரு எலும்பிச்சை அளவு மாவை எடுத்து படத்தில் உள்ளது போல ஓவல் சைசில் கொழுக்கட்டை பிடிக்கவும். மீதமுள்ள மாவிலும் இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளவும்.
  6. பின்னர் இட்லித் தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். சுவையான கொழுக்கட்டை ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...