சாரதா சமையல்
Saturday, April 13, 2024
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Wednesday, April 10, 2024
கொத்து சப்பாத்தி ( Lunch box Recipe )
தேவையான பொருள்கள் -
சப்பாத்தி - 2
முட்டை - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிது
மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
சப்பாத்திகளை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
சப்பாத்திகளை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறி கடாயில் ஒதுக்கி வைத்து கொள்ளவும். கடாயின் நடுவில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பரப்பி ஒரு நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு நன்றாக கிளறி சப்பாத்தி துண்டுகளையும் சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான கொத்து சப்பாத்தி ரெடி . குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுக்கலாம் .
Sunday, March 17, 2024
முழு கொத்தமல்லி பொடி / தனியா பொடி !
தேவையான பொருள்கள் -
முழு கொத்தமல்லி ( தனியா ) - 1 கப் ( 100 கிராம் )
மிளகாய் வத்தல் - 10
புளி - சிறிய கோலி அளவு
பூண்டு பற்கள் - 10
கறிவேப்பிலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை -
பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கொத்தமல்லியை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அதே கடாயில் மிளகாய் வத்தலை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து அடுப்பை அணைத்து விட்டு வறுத்த மிளகாய் வத்தலை மல்லியோடு சேர்த்து பரப்பி வைக்கவும்.
சூடாக இருக்கும் கடாயில் பூண்டு பற்கள், கறிவேப்பிலை, புளி, உப்பு எல்லவற்றையும் சேர்த்து சூடாக்கி அதையும் சிறிது நேரம் ஆற விடவும்.
நன்கு ஆறியதும் மிக்சியில் திரிக்கவும். திரித்த பொடியை நன்கு ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். இட்லி, தோசைக்கு
அருமையானகொத்தமல்லி பொடி ரெடி!!
Sunday, November 12, 2023
Sunday, May 8, 2022
அன்னையர் தினம் / Mother 's Day
இதயம் எழுதும் கவிதை நீ !
எங்கும் நிறைந்த புதுமை நீ !
பாய்ந்து வரும் நதியும் நீ !
மதிய நேர தென்றல் நீ!
மண்ணில் உலவும் தேவதை நீ !
புதிய உலகில் பழமை நீ !
பூத்து நிற்கும் தாய்மை நீ !
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !
Tuesday, March 31, 2020
வெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi
தேவையான பொருள்கள் -
- சப்பாத்தி - 3
- முட்டை - 1
- காலி பிளவர்( - 2 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - சிறிது
- மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
- சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம், காலிபிளவர், மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து எண்ணெய்யில் ஊற்றி அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து பொடிமாஸ் செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் அதே கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பிறகு அதனுடன் 1/4 கப் தண்ணீரும், காலிபிளவர், மற்றும் சிறிது உப்பும் சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும்
- காலிபிளவர் வெந்ததும் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் முட்டை பொடிமாஸ், சப்பாத்தி துண்டுகள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இறுதியில் மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான வெஜ் முட்டை சப்பாத்தி ரெடி. காலை டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்தும் கொடுக்கலாம்.
Friday, October 26, 2018
மிக்ஸர் சட்னி / Mixture Chutney
Subscribe to:
Posts (Atom)