Saturday, June 6, 2015

வெள்ளை அவல் புட்டு / White Aval Puttu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வெள்ளை அவல் - 2 கப் ( 400 கிராம் )
  2. தேங்காய் துருவல் - 1 கப்  ( 200 கிராம் )
  3. சீனி - 1 கப் ( 200 கிராம் )
  4. உப்பு - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில்  கடாயை வைத்து சூடானதும் அவலை போட்டு மிதமான சூட்டில் வைத்து வெள்ளை நிறம் அதிகம் மாறாமல்  2 நிமிடம் லேசாக வறுக்கவும். பிறகு அதை சிறிது நேரம் ஆறவிடவும்.
                                                 
  2.  ஆறிய பின் மிக்ஸ்சியில் ரவை பதத்திற்கு திரித்துக் கொள்ளவும்.
                                                                     
      
  3. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் திரித்து வைத்துள்ள அவல் பொடியோடு உப்பு  மற்றும் சிறிது சிறிதாக வெந்நீர் ஊற்றி கிளறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
                                                                                                                                                                                                
  4. ஊறிய பிறகு மிக்ஸ்சியில் போட்டு pulse ல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.கட்டிகள் இல்லாமல் நல்ல மிருதுவாகி விடும். பிறகு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கலக்கவும்.
  5. புட்டுக்குழலில் அவல் கலவையை வைத்து நிரப்பவும்.                  
  6. அடுப்பில் குக்கரை வைத்து தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் அதன் மேல் அவல், தேங்காய் துருவல் கலவையை நிரப்பி வைத்திருக்கும் புட்டு குழலை வைக்கவும். 8 நிமிடத்தில் வெந்து விடும்.                                                       
  7. மீதமுள்ள புட்டுக் கலவையையும் இதே முறையில் அவித்து எடுக்கவும்.
  8. பிறகு அவித்த புட்டுடன் 1 கப் சீனியை நன்றாக கலந்து பரிமாறவும்.
 குறிப்புகள் -
  1. சீனிக்கு பதிலாக அச்சு வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.
  2. அவல் புட்டுடன் வறுத்த முந்திரிபருப்பு, எலக்காய் தூள் சிறிதும் சேர்த்துக் கொள்ளலாம்.

23 comments:

  1. அவல் புட்டு.....சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது..... செய்முறையும், படங்களும் அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் சகோ. வருகைக்கு நன்றி

      Delete
  2. இப்படியும் ஒரு புட்டு வகையா? ஆச்சர்யமாக உள்ளது.

    ReplyDelete
  3. நல்லதொரு குறிப்பை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  4. அழகு!..

    வெள்ளிச் சீனிக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்!..
    இரும்புச் சத்து மிக்க சர்க்கரை உடலுக்கு நல்லது..

    பதிவு கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. நாட்டு சர்க்கரையும் ( அச்சு வெல்லம் ) சேர்த்தும் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன் கவனிக்கவில்லையா ? வருகைக்கு நன்றி சார்.

      Delete
  5. அவல் புட்டு அழகு புட்டாக இருக்கிறது...

    ReplyDelete
  6. அருமையான கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  7. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!

    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

    ( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

    மற்றும்!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளம் வந்து வாழ்த்தும் சொல்லி விட்டேன் சகோ.

      Delete
  8. அவல் புட்டு கேள்விப்படாத குறிப்பு. ஈஸியாக இருக்கு.செய்துபார்க்கிறேன் அக்கா. உங்க புட்டு அவிக்கும் பாத்திரம் அருமை. நன்றி

    ReplyDelete
  9. செய்து பாருங்கள் புட்டு அவிக்கும் பாத்திரத்திற்கும் சொன்ன கருத்துக்கு நன்றி பிரியசகி.

    ReplyDelete
  10. புட்டுக்குழல் எல்லாம் இல்லை.அத்னால் உங்கள் பதிவை ரசிப்பதோடு சரி!

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்தற்கு நன்றி சார்.

      Delete
  11. சூப்பர்ம்மா, செய்தால் போச்சு, இப்ப எல்லாம் நானும் ஏதோ செய்கிறேன் புதுசாய், நன்றி.

    ReplyDelete
  12. நீங்களும் புதுசா செய்வது குறித்து எனக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி.

    அவலில் வித்தியாசமாய் புட்டு. படங்களும் செய்முறை விளக்கங்களும் மனதில் பதியும்படியாய் நன்கு பதிந்துள்ளீர்கள். நன்றி சகோ., அவலில் உப்புமாக்கள் செய்திருக்கிறேன் புட்டு செய்ததில்லை .! நானும் இதை முறையில் செய்து பார்க்கிறேன், பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    என் தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. நானும் அவல் உப்புமா,அவல் பாயசம் தான் செய்திருக்கிறேன்.
    அவல் புட்டு நன்றாக இருக்கும்மா..
    புட்டு குழாயும் சூப்பர்..

    ReplyDelete
  15. உங்க புட்டுக்குழல் அழகோ அழகு! எங்கே கிடைக்குது?

    ஒருநாள் அவல் புட்டு செஞ்சு பார்க்கணும். நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...