Tuesday, June 2, 2015

சுரைக்காய் பால் கூட்டு / Bottle Gourd Coconut MIlk Curry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சுரைக்காய் - 150 கிராம் 
  2. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. பச்சை மிளகாய் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது 
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் - 1/2 மூடி 
                                                                                              
செய்முறை -
  1. சுரைக்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.                                                                         
  2. தேங்காயை துருவி மிக்ஸ்சியில் அரைத்து முதலில் 100 மில்லி அளவுக்கு பால் எடுத்து தனியே வைக்கவும்.
                                                                                            
  3. அதே தேங்காய் துருவலை மீண்டும் மிக்ஸ்சியில் அரைத்து 200 மில்லி அளவுக்கு பால் எடுத்து தனியே வைக்கவும்.
                                                                                 
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இரண்டாவதாக எடுத்த 200 மில்லி தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.                                                         
  6. சுரைக்காய் நன்கு வெந்து பால் வற்றி வரும் போது முதலில் எடுத்த 100 மில்லி தேங்காய் பாலை ஊற்றி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். பிறகு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

30 comments:

  1. அடடே புகைப்படங்களே உடனே செய்து பார்க்கச் சொல்லுதே.....

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

      Delete
  2. சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்
    யார், யாரோடு கூட்டு சேர்கிறார்களோ?
    இல்லையோ?
    நிச்சயமாய் சகோதரி
    உண்ணாமல் புறக்கணிக்க மாட்டேன்§
    நான் (புதுவை வேலு /யாதவன் நம்பி)
    நீங்கள் வைத்த சுரைக்காய் பால் கூட்டோடு
    நிச்சயமாய் கூட்டு வைத்து வெற்றி பெறுவேன்!
    வெற்றி மணம் வீசும் "சுரைக்காய் பால் கூட்டு" / Bottle Gourd Coconut MIlk Curry
    வெல்லட்டும் மக்களின் மனங்களின் ஓட்டு!
    நன்றி சகோ!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கவிதை வடிவில் வந்து கருத்து சொன்ன சகோவுக்கு நன்றி.

      Delete
  3. சுரக்காய் சாப்பிடுவது உடலில் உள்ள கேட்ட நீரை அகற்றுவதற்கு நல்லதென்பர். ஆகையால் செய்முறைக்கு நன்றி !

    ReplyDelete
  4. தொடர் வருகை தந்து கருத்து சொல்லவதற்கு நன்றி இனியா

    ReplyDelete
  5. வணக்கம்
    அம்மா

    எங்கள் வீட்டில் இன்று சுரக்காய்தான்... சமையல் குறிப்போடு அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.

      Delete
  6. நான் என்ன சொல்லனும் என்று நினைத்து வருகிறேனோ, அதை முதல் ஆளாய் மேலே ஒரு ஆள் முந்திக்கொண்டால் எப்படிம்மா?
    சூப்பர்ம்மா,
    அவசியம் இதனைச் செய்வேன். உடலுக்கு நல்லது என்பார்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து கருத்து சொல்லுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் என்னுடைய குறிப்பின் படி செய்து பார்த்த recipe யை போட்டோ எடுத்து நீங்கள் கொடுக்கும் கருத்துடன் இணைக்கலாம். நன்றி மகேஸ்வரி.

      Delete
    2. ஆமாம்மா, எனக்கு சொல்லித்தர ஆள் இல்லை. எனவே உங்கள் குறிப்புகளை நான் அதிகம் பயன்படுத்துகிறேன். முந்தைய பதிவுகளையும் பார்த்து. நன்றி.

      Delete
  7. பால் கூட்டைப் பார்க்கையிலேயே...
    மனம் பறிபோகுதே...

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கருத்து சொன்ன சகோவுக்கு நன்றி.

      Delete
  8. பதார்த்தம் அருமை. புகைப்படங்கள் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி சார்

      Delete
  9. புகைப்படங்களுடன் அருமையான விளக்கம்... இன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய பதிவை பார்த்து செய்த recipes போட்டோ இருந்தால் நீங்கள் கருத்து கொடுக்கும் போது உங்கள் போட்டோவையும் இணைக்கலாம். நன்றி தனபாலன் சார்.

      Delete
  10. சுரைக்காய் பால் கூட்டு - நினைத்தாலே மகிழ்வு..

    பழைய வீட்டில் மாட்டுக் கொட்டகை மேல் பச்சைப் பசேல் என சுரைக் கொடி படர்ந்து கிடக்கும் . வஞ்சகம் இன்றி பூ பூத்து காய்க்கும்..

    தங்களது செய்முறையில் கூட்டு சற்றே தளர்வாக இருக்கின்றது.

    எங்கள் வீட்டில் - தேங்காயைக் கெட்டியாக அரைத்து ஊற்றி - கொதிக்கும் போது சிறிதளவு அரிசிப் பொரி மாவினைக் கலப்பார்கள்..

    செய்து பாருங்களேன்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பதிவை பார்த்து கருத்து சொல்ல வரும் பொழுது உங்களுக்கு மலரும் நினைவுகள் அடிக்கடி வந்து போகுது. எனக்கு உங்கள் வீட்டு சமையல் குறிப்பும் கிடைக்குது. மிக்க நன்றி சார்.

      Delete
  11. தேங்காய்பால் சேர்த்து செய்வது இங்கு மிக குறைவு. ஆனா எனக்கு ரெம்ப பிடிக்கும். உங்க ரெசிபி பார்க்க செய்யதூண்டுகிறது. சுரைக்காய் கிடைத்தால் செய்திடுவேன். நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரியசகி சுரைக்காய் கிடைக்கும் போது செய்து பாருங்கள்.

      Delete
  12. செய்முறையை படங்களுடன் விளக்கியது அருமை..சாப்பிட்டா நல்லாத்தான் இருக்கும்!

    ReplyDelete
  13. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரி.

    படங்களுடன், செய்முறை விளக்கங்களும் அருமை.! சுரைக்காய் இதுவரை சாப்பிட்டதேயில்லை.! சுவை வெள்ளரிக்காய் மாதிரி இருக்குமோ.? பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    என் பதிவாக "மைசூர்ப்பாகு" எடுத்துக் கொள்ள வாருங்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  15. நல்ல கூட்டு!! கேரளத்து ஓலன் இப்படித்தான் கிட்டத்தட்ட...

    ReplyDelete
  16. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  17. கண்டிப்பாக செய்து பார்கிறேன் அம்மா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...