Thursday, June 25, 2015

தக்காளி சட்னி / Tomato Chutney

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி - 2
  2. பெரிய வெங்காயம் - 1
  3. மிளகாய் வத்தல் - 3
  4. பூண்டுப்பல் - 3
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போட்டு வதக்கவும். பிறகு பூண்டு பல், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். 
  4. தக்காளி நன்றாக வதங்கியதும் தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
  5. வதக்கியதை நன்றாக ஆற விடவும். நன்கு ஆறியதும் மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான தக்காளி சட்னி ரெடி.  இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

22 comments:

  1. இட்லி தோசைக்கு சரியானது - தக்காளிச் சட்னி!..

    முறையான செய்முறைக் குறிப்புகளுடன் அழகான பதிவு.. மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சார்.

      Delete
  2. ருசித்தோம், இனிமையான படங்களுடன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  3. வணக்கம்மா, நான் சும்மா கையில் கிடைத்ததை வைத்து இந்த சட்னி செய்வேன், தேங்காள் சேர்க்காமல், மற்றவைகளை வதக்கி அரைத்து தாளித்து,,,,,,,,
    ஆனால் தாங்கள் சொன்ன பிறகு இனி முறையாக செய்கிறேன்,
    எளிய விளக்கம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தேங்காய் என படிக்கவும்.

      Delete
    2. தேங்காய் என்றே படித்து விட்டேன். தவறையும் சுட்டி காட்டி கருத்து சொன்ன மகேஸ்வரிக்கு நன்றி.

      Delete
  4. சுவையான தக்காளிச் சட்னி... நன்றி...

    ReplyDelete
  5. அருமையான,சுவையான சட்னி குறிப்பு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. பிரியசகியின் கருத்துக்கு நன்றி.

      Delete
  6. நான் செய்திருக்கிறேன் இப்போ தான் முறையாக கேட்டிருக்கிறேன். உடனே செய்ய வேண்டும் போல் உள்ளது நன்றி !

    ReplyDelete
  7. செய்து பாருங்கள் இனியா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. இட்லிக்கு சூப்பர் காம்பினேசன்.

    ReplyDelete

  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  10. தக்காளி சட்னிக்கு படங்களுடன் விளக்கம் அருமை அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார் கருத்துக்கு நன்றி

      Delete
  11. தக்காளி சட்னி செய்முறை அருமை.நான் தேங்காய் சேர்க்காமல் தான் செய்வேன்.அடுத்த முறை செய்யும் பொழுது உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்.
    தோசை மொறு மொறுவென்று சூப்பர்.

    ReplyDelete
  12. ஷமியின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. சூப்பரன சட்னி சகோ...அருமையாக இருக்கும்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...