Wednesday, June 10, 2015

ஸ்ட்ராபெரி ஜாம் / Strawberry Jam


தேவையான பொருட்கள் -
  1. ஸ்ட்ராபெரி - 250 கிராம்
  2. சர்க்கரை - 250 கிராம்
  3. லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. ஸ்ட்ராபெரியை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெட்டிய துண்டுகள் 250 கிராம் இருக்க வேண்டும்.
  2. வெட்டி வைத்துள்ள ஸ்ட்ராபெரியை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் மசித்து வைத்துள்ள ஸ்ட்ராபெரியை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
  4. பிறகு அதனுடன் சீனியும் லெமன் ஜூஸும் சேர்க்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
  5. எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்து ஜாம் பதத்திற்கு வரும் வரை அவ்வபோது கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  6. பதம் தெரியவில்லை என்றால் கேன்டி தெர்மாமீட்டரை (Candy thermometer) பயன்படுத்தி கொதி நிலை 220 F (105 C) வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  7. கேன்டி தெர்மாமீட்டர் இல்லையென்றால் ஒரு ப்ளேட்டை ப்ரீசரில் வைக்கவும். சிறிது ஜாமை எடுத்து அந்த குளிர்ந்த ப்ளேட்டில் வைக்கவும்.  இவ்வாறு செய்வதனால் ஜாம் உடனே ரூம் டெம்பிரேசருக்கு வந்து விடும். அதை ஒரு விரலால் நடுவே கோடு போடவும். இரண்டு பக்கமும் ஒட்டாமல் தனி தனியாக பிரிந்தால் அது தான் சரியான பதம்.
  8. நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து மூடி வைக்கவும். பிரிஜ்ஜில் 2 அல்லது 3 வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
  9. சுவையான ஸ்ட்ராபெரி ஜாம் ரெடி.

24 comments:

  1. வாவ்...சூப்பர்...!!! சகோ....உடனே சாப்பிடனும் அப்படின்னு தோனுது....செய்து தான் சாப்பிடனும்...ம்.....
    பிரபா உங்கள் மகள் தானே.....பிரபாவின் சமையலா...?

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ பிரபா எனது மகள் தான். அவள் வீட்டில் செய்ததை போட்டோ எடுத்து அனுப்பி இருந்தாள். செய்த விபரமும் சொன்னாள்.அதை நான் டைப் செய்து பதிவாக போட்டு விட்டேன். முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  2. உண்மையாகதான்.. சாப்பிடனும் போல இருக்கு..!!.1 மாதத்திற்கு முன்னர் ஸ்ரோபரி சீசனாக இருந்தது. பதம் எப்படி தெரிந்துகொள்வது என்று சூப்பரா சொல்லியிருக்கிறீங்க. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி பிரியசகி.

      Delete
  3. அது சரி!.. தொழில் நுட்பமெல்லாம் கூடியதாக அல்லவா இருக்கின்றது!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. ஆஹா போட்டோவைப் பார்த்தாலே எச்சில் ஊறுகிறதே.....

    ReplyDelete
    Replies
    1. எடுத்து சாப்பிட்டு இருக்கலாமே சகோ.

      Delete
  5. வணக்கம் சகோதரி.

    பார்க்கும் போதே அதன் மணம் மனதை மயக்க சாப்பிட தூண்டுகிறது. அருமை சகோதரி. ஜாமெல்லாம் கடையில் வாங்குவதோடு சரி. இது வரை செய்து பார்த்ததில்லை. இனி தங்கள் பக்குவப்படி சமயமும் சேர்ந்து வாய்த்தால் செய்கிறேன்.குறிப்பும் எடுத்துக்கொண்டேன் ,நன்றி சகோதரி.
    பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.

      Delete
  6. ஆகா கருத்து அருமை சார்.

    ReplyDelete
  7. சூப்பரா இருக்கும் போல, பிரபாவுக்கு தான் நன்றி சொல்லனும், சும்மா, எளிமையான செயல் விளக்கம். நன்றிம்மா, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பிரபாவுக்கு உங்கள் வாழ்த்தை சொல்லி விட்டேன் மகேஸ்வரி.

      Delete
  8. வழக்கம்போல அருமை. புகைப்படங்கள் அதைவிட அருமை.

    ReplyDelete
  9. ஸ்ட்ராபெரி ஜாம் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு.
    உங்கள் மகளுக்கு வாழ்த்தை சொல்லிடுங்க அக்கா...

    ReplyDelete
    Replies
    1. மகளுக்கு வாழ்த்து சொல்லி விட்டேன் Shamee.

      Delete
  10. அட எனக்கு பிடித்த ஜாம் பார்க்க அசத்தல் லாக உள்ளது எனக்கும் சாப்பிடவேண்டும் போல் தான் உள்ளது! நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. எடுத்து சாப்பிட்டு இருக்கலாமே சகோ.

      Delete
  11. ஆஹா! ஜாம் ஜாம் என்று ஒரு பதிவு
    ஜாம் பதிவு இனிப்பு என்பது என் கணிப்பு
    சுவைக்க விருப்பம் "ஸ்ட்ராபெரி ஜாம் "
    நன்றி சகோ!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  12. ஜாம் ஜாம் என்ற கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  13. வணக்கம் !

    நற்சுவை உணவை நாளும்
    ....நல்கிடும் உங்கள் பாசம்
    பெற்றவர் அன்பைப் போலே
    ....பிரியமாய் இருக்கக் கண்டேன்
    இற்றரை உள்ளோர் நெஞ்சில்
    .....இனித்திடும் உங்கள் செய்கை
    கற்றிடத் துணிந்தால் போதும்
    .....கனவிலும் மணக்கும் என்பேன் !

    பார்த்தவுடன் உண்ணத் தோணுதே ம்ம் இதையெல்லாம் செய்துண்ண நமக்குத்தான் நேரமில்லையே ஆகா அகா

    அருமை தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    .....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...