கூழ் வத்தல், கூழ் வடகம், வடாம் என்று வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த கூழ் வத்தலை பார்க்கும் போது எல்லோருக்கும் தன்னுடைய இளமைக்கால மலரும் நினைவுகள் மனதில் வந்து போகும். கோடை விடுமுறை வந்து விட்டால் மாவு அரைப்பதிலிருந்து கூழ் காய்ச்சுவது வரை நல்ல ஜாலியாக இருக்கும். கூழ் வத்தலை எடுத்து வைக்க வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்கள், தோழிகள் என்று எல்லோரும் வருவார்கள். இப்போது முன்பு போல பெரிய அளவில் செய்ய முடியாவிட்டாலும் தேவையான அளவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
இனி கூழ்வத்தலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள் -
இனி கூழ்வத்தலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள் -
- இட்லி அரிசி - 400 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- எள் - 1 மேஜைக்கரண்டி
- சீரகம் - 1 மேஜைக்கரண்டி
- தண்ணீர் - 1 1/2 லிட்டர்
- அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்திக்கு அரைத்துக் கொள்ளவும்.
- கிரைண்டரை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி அந்த தண்ணீரையும் அரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து அதில் 1 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை ஊற்றி கை விடாமல் கிளறவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
- மாவு கூழ் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கூழ் பதம் வர 15 நிமிடம் ஆகும். இறுதியில் எள், சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி ஆற விடவும்.
- பிறகு ஒரு வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து வெயில் வரும் இடத்தில் விரித்து கூழை எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும். வெயில் போகும் வரை நன்கு காய விடவும்.
- எல்லா கூழ் மாவையும் இதே முறையில் செய்யவும். மிளகாய் வத்தலை போட்டு வைத்தல் காக்கைகள் வராது.
- மறு நாள் ஓரளவு காய்ந்து விடும். துணியை மாற்றி போட்டு சிறிது தண்ணீர் தெளித்து முன் புறம் வத்தலை எடுத்தால் எல்லா வத்தலும் எளிதாக வந்து விடும்.
- எடுத்த வத்தலை பேப்பரில் பரப்பி வெயிலில் மாலை வரை காய வைக்கவும். நன்றாக காய்ந்து விடும்.
- பிறகு கூழ் வத்தலை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்.
வடகம் நான் சும்மாவே தின்று தீர்த்து விடுவேன்... எனக்கு பிடித்தமானது.
ReplyDeleteஉடன் வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.
Deleteஆஹா.. தேவகோட்டைத் தென்றல் முந்திக் கொண்டு விட்டதே!...
ReplyDeleteஎதற்கும் வற்றலை நன்றாக மூடி வையுங்கள்!..
ஆல்ரெடி சுட்டு விட்டேன் ஜி
Deleteஉங்களுக்கு 2 நிமிடம் முன்பு வந்த படியால் சகோ எடுத்து ருசி பார்த்து விட்டார் போல !
Deleteவற்றல் என்றால் - வற்றல் தான்!..
ReplyDeleteவற்றிப் போனதே - வற்றல்.. எத்தனை எளிமை.. அழகு!..
அதற்கு மேல் - வடாம்.. என்ன வடாம் என்றொரு பெயர்!?..
சிலகாலமாக, வார - மாத இதழ்கள் சிலவற்றில் இப்படியெல்லாம் பெயர் போடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர்.
மல்லி என்பதை தனியா என்பார்கள்..
இவர்கள் நாக்கில் வசம்பை வைத்துத் தேய்த்தாலும் கேழ்வரகு என்று வராது.. வேலைமெனக்கெட்டு ராகி என்பார்கள்..
நமக்கு வசம்பு வீணாகப் போனது தான் மிச்சம்..
வணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் பார்த்தவுடன் சாப்பிடத்தான் மனம் வருகிறது.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர் வருகை தந்து கருத்து சொல்வதற்கு நன்றி ரூபன்.
Deleteவற்றல் செயல்முறையையும்,வற்றலையும் பார்க்க நன்றாக இருக்கு. கொஞ்சம் இங்கே அனுப்புங்க அக்கா.
ReplyDeleteஇட்லி அரிசியிலா செய்யனும்.?
வாங்க பிரியசகி இட்லி அரிசியில் தான் செய்யணும். பச்சரிசியில் செய்தால் கொஞ்சம் hard ஆக இருக்கும். நீங்கள் 100 கிராம் அரிசியில் கூட செய்து பாருங்கள். நானும் உங்களுக்கு பார்சல் அனுப்புகிறேன்
Deleteமனதளவில் வற்றாமல் நிற்பது வற்றலே.
ReplyDeleteநன்றி சார்..
Deleteபடங்களுடன் செய்முறை விளக்கம் அருமை... நன்றி...
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
Deleteஅட இது புதுசா இருக்கே இதை பொரித்து தானே சாப்பிடுவது இல்லயா ம்..ம் தனிய சாப்பிடுவீர்களா அல்லது சோற்றுடனா. பார்க்க அழகாக உள்ளது. கூழ் என்பது நம்ம பக்கத்தில் கடல் உணவும் சில மரக்கறிகள் சிலவகையும் சேர்த்து ஒடியல் மா சேர்த்து soup மாதிரி காய்ச்சுவார்கள். அதைத்தான் கூழ் என்போம் veg இலும் செய்யலாம். இன்னுமொரு வகை அது ஆடிக் கூழ் என்போம். அது பனங்கட்டி சேர்த்து அரிசிமா உளுத்தமா சேர்த்து செய்வார்கள்.பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்...!
ReplyDeleteவாங்க இனியா வத்தலை எண்ணெயில் பொரித்து தான் சாப்பிடணும். சாம்பார் சாதம், புளி சாதம். மாங்காய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ReplyDeletemam well explained.
ReplyDeleteThank you Gayathri.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteதங்கள் பதிவை படித்ததும், உண்மையில் மலரும் நினைவுகளில் சிக்கிக் கொண்டேன். ௬ழ் வற்றல் செய்முறை விளக்கங்கள், படங்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. எனக்கும் இட்லி அரிசியில் செய்வது புதிதாக இருந்தது. அம்மா வீட்டில் பச்சரியில்தான் செய்வார்கள், இனி நானும் சமயம் ஏற்படும் போது தங்கள் பாணியில் செய்து ருசிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
எனது முறைப்படியும் செய்து பாருங்கள் சகோ.
Deleteகூழ்வத்தல் உண்ணக் கொடுத்திடும் உற்சாகம்
ReplyDeleteவாழ்வுக்கும் நன்மை வகுத்து !
அருமை தொடர வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
கவிதை வடிவத்தில் கருத்து சொன்ன சீராளனுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎன் வருகை சற்று தாமதம், என் கை தான் காரணம், எனக்கு பிடித்த வற்றல், தங்கள் புகைப்டங்கள் அனைத்தும் சூப்பர், நன்றிம்மா,
ReplyDeleteவருகை தாமதமாக இருந்தாலும் கருத்து அருமை மகேஸ்வரி.
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteபிடித்த நொறுவல். இரசம் மற்றும் மோர்க்குழம்புடன் சேர்த்து உண்ணச் சுவையாக இருக்கும்.
தாங்கள் விளக்கியவிதம் அருமை.
புகைப்படங்கள் பசியைத் தூண்டுகின்றன.
நன்றி.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தாருங்கள்.
ReplyDeleteஆகா!பொரித்துச் சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் கூட இரண்டு கவளம் இறங்காதோ!
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
ReplyDeleteகூழ் வற்றல்...மலரும் நினைவுகளை தருகிறது.
ReplyDeleteஇப்போது சற்று பரவாயில்லை சகோ. நலம் விசாரித்தமைக்கு நன்றி.
சகோவின் வருகைக்கு நன்றி. நீங்கள் நலமானது குறித்து மகிழ்ச்சி.
ReplyDeleteஅருமை,கட்டாயம் செய்து பார்ப்பேன்
ReplyDeletevarukaiku nantri. seythu parthu karuthu sollungal
ReplyDeleteகலர் கலரா வடகம் (ROUND)செய்வது பற்றி பதிவிடுங்கள் சகோதரி
ReplyDeleteகண்டிப்பாக பதிவு போடுகிறேன் சகோ.
DeleteNice
ReplyDeleteUngal seyal murai vilakkam super.
ReplyDeleteThank you
ReplyDelete