Monday, June 22, 2015

முட்டை பொரியல் / Egg Poriyal


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 3
  2. தக்காளி - 1
  3. பச்சை மிளகாய் - 1
  4. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி 
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி 
  9. மல்லித்தழை - சிறிது 
  10. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. சின்ன வெங்காயம் - 12
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  2. வெங்காயம், மிளகாய் இரண்டையும் நீள வாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. பிறகு கலக்கி வைத்துள்ள முட்டைகளை ஊற்றி வேகும் வரை நன்கு கிளறவும்.
  6. இறுதியில் மல்லித்தழை சேர்த்து நன்றக கிளறி அடுப்பை அணைத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  7. சுவையான முட்டை பொரியல் ரெடி.

19 comments:

  1. அருமையாக செய்துள்ளீர்கள்...

    ReplyDelete
  2. எளிய செயல்முறை விளக்கம். சூப்பர். செஞ்சுட்டா போச்சு,

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள் மகேஸ்வரி.

      Delete
  3. parkum pothe naavooruthu akka....itntha muraiyil seithu parkiren

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா
    அருமையான செய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ரூபன்.

      Delete
  5. இதுதான்... இதேதான்!...

    பாவம்.. கோழிக் குஞ்செல்லாம் பிழைத்துப் போகட்டும் என்று - இதையெல்லாம் விட்டு விலகி ஆறேழு வருடங்களாகின்றன..

    ஆனாலும் -

    இது நாட்டுக் கோழி முட்டையா?..
    பிராய்லர் கோழி முட்டையா?..

    ReplyDelete
    Replies
    1. கோழி முட்டையை விட்டு விலகியதை அறிந்தேன் சார். இது பிராய்லர் கோழி முட்டை தான்.

      Delete
  6. படங்களே இவ்வளவு அழகாக இருக்கிறதே...

    ReplyDelete
  7. இயல்பான உணவு. கூறியமுறை நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  8. படங்களுடன் விளக்கம் அருமை.
    எங்கள் வீட்டில் சாப்பிடுவது இல்லை.

    ReplyDelete
  9. வாங்க சகோ நீங்கள் முட்டை சாப்பிடாவிட்டாலும் வருகை தந்து கருத்து சொன்னதற்கு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  10. வணக்கம் !

    நான் சொல்ல மாட்டேன் இதைப்பற்றி நான் சொல்லமாட்டேன் ஏன்னா ? நம்ம இதில் சீப் குக் ஹா ஹா விதவிதமா பொரிப்பேன் இதுபோலத்தான் அதிகம் ,ம்ம் மிக்க நன்றி

    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நீங்கள் விதவிதமாக முட்டை பொரியல் செய்வது குறித்து மகிழ்ச்சி. ஒரு வித முட்டை பொரியலை சொல்லி இருக்கலாம். வருகைக்கு நன்றி சீராளன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாகச் சொல்கிறேன் முதல்ல முட்டை பொரியலொடு நம்ம வீட்டுக்கு வாங்க ஓகே வா அதன் பிறகு நான் வைக்கிறேன் விருந்து
      http://soumiyathesam.blogspot.com/

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...