பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தாளிக்க -
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடுகு - 2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- அரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பின் அரிசி,தேங்காய் துருவல் மற்றும் உப்பை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். நடுநடுவே தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி மாவு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- கடாயிலிருந்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். எலுமிச்சம்பழம் அளவு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒவ்வொரு உருண்டையையும் ஓவல் சைஸ்ஸில் பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். 20 கொழுக்கட்டை வரை வரும்.
- கொழுகட்டையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
சுவை. எனக்கும் இது சாப்பிடப் பிடிக்கும்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஸ்ரீ ராம்.
Deleteஅருமையாக இருக்கும் . படங்கள் அழகு
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ.
ReplyDeleteஅடிக்கடி முன்பு செய்வேன்.நல்ல ருசி.
ReplyDelete