தேவையான பொருள்கள் -
- புளி - எலுமிச்சை அளவு அல்லது புளி பேஸ்ட் - 5 மேஜைக்கரண்டி
- தக்காளி - 1 (சிறியது)
- மிளகு - 1 தேக்கரண்டி
- மல்லி - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- பூண்டுப் பல் - 5
- காயம் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித் தழை - சிறிது
- கறிவேப்பில்லை - சிறிது
- கடுகு - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 1
செய்முறை -
- புளியை 400 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். அல்லது புளி பேஸ்டை 5 மேஜைக்கரண்டி எடுத்து 400 மில்லி தண்ணீரில் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
- தக்காளியை புளித் தண்ணீரில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மிளகு, மல்லி, சீரகம், பூண்டுப் பல் எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தல் போட்டு தாளிக்கவும்.
- தாளித்ததும் காயம், பொடித்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறி புளித் தண்ணீரை ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும். கறிவேப்பிலை, மல்லித் தழையை தூவி நுரை வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கடாயிலுள்ள ரசத்தை அதனுள் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான ரசம் ரெடி.
Mam rasam powder vechu rasam vekka sollunga thanga
ReplyDeleteok solli tharen
ReplyDelete