தேவையான பொருள்கள் -
- கோதுமை மாவு - 300 கிராம்
- ரவை - 1 தேக்கரண்டி
- வெந்நீர் - தேவையானஅளவு
- சூடான பால் - 50 மில்லி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிபதற்கு தேவையான அளவு
- ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை மற்றும் 50 மில்லி பாலை ஊற்றி பிசையவும். பிறகு தேவையான அளவு வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும் .
- அரை மணி நேரம் கழித்து மாவை மீண்டும் ஒரு தடவை பிசைந்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக் கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். இரு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விட வேண்டும்.
- எண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும். எண்ணெய் சூடாகும் முன் பூரியைப் போட்டால் உப்பி வராது.
- மாவை பிசைந்து அதிக நேரம் வைத்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சி விடும்.
Naan tangaludaya blog padikkum poluthu aval Vikatan puthagam paditha santos am erpadugirathu.
ReplyDeleteThank you so much Gayathiri.
DeleteSuper
ReplyDeleteThank you
ReplyDelete