பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தாளிக்க -
தேவையான பொருள்கள் -
- சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ
- மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
- வேர்க்கடலைத் தூள் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையானஅளவு
தாளிக்க -
- எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித் தழை - சிறிது
- வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பை போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை போட்டு அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். பாதி வெந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஆற விடவும். ஆறிய பின் தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பாதி வதங்கியதும் சேப்பங்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- சேப்பங்கிழங்கு நல்ல பொன்னிறமானதும் மிக்சியில் பொடித்த தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
- இறுதியில் வேர்க்கடலைத் தூள், மல்லித் தழை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
- வேர்க்கடலைத் தூள் - வறுத்த வேர்க்கடலைப்பருப்பை மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். இதை பொரியல், ரோஸ்ட் வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
No comments:
Post a Comment