பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையானபொருள்கள் -
- புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம்
- பச்சரிசி - 200 கிராம்
- வெள்ளை முழு உளுந்து - 100 கிராம்
- கடலைப் பருப்பு - 25 கிராம்
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். நடு நடுவே தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும்.
- பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.
Crispy dosa's. along with it I add poha also.
ReplyDeleteகடலைப்பருப்பு சேர்த்ததில்லை.
ReplyDelete