பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையானபொருள்கள் -
தேவையானபொருள்கள் -
- முட்டை - 4
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
- வதக்கிய வெங்காயம், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை முட்டையோடு சேர்த்து நன்றாக நுரை வரும்படி கலக்கி வைக்கவும்.
- அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு மாவுக் கரண்டி அளவு முட்டைக் கலவையை எடுத்து பரப்பி ஊற்றவும். 1 நிமிடம் ஆனதும் மாற்றிப் போடவும். பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள முட்டைக் கலவையையும் இதே போல் தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும். சுவையான ஆம்லெட் ரெடி.
No comments:
Post a Comment