Wednesday, May 1, 2013

காலிபிளவர் பட்டாணி பொரியல்



பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலிபிளவர் - 1 கப்
  2. பச்சைப் பட்டாணி  - 1/2 கப்
  3. பச்சை மிளகாய் - 1
  4. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1/2
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. கொத்தமல்லித் தழை - சிறிது
செய்முறை -
  1. வெங்காயத்தையும், காலிபிளவரையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். காய்ந்த பட்டாணி என்றால் 4 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். 5 நிமிடம் வெந்நீரில் காலிபிளவர் இருக்க வேண்டும். பிறகு தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் காலிபிளவர் சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
  4. நன்கு வெந்தவுடன் பட்டாணியை சேர்த்து கிளறி மிளகுத் தூள் போட்டு 1 நிமிடம் கிளறி கொத்தமல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான காலிபிளவர் பட்டாணி பொரியல் ரெடி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...