Saturday, October 12, 2013

புளி சாதம் / Tamarind Rice

                        
 பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. உதிரியாக வேக வைத்த அரிசி சாதம் - 2 கப்
  2. புளி - நெல்லிக்காய் அளவு
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு                                                              

தாளிக்க -
  1. நல்லெண்ணெய்  - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  4. கறிவேப்பில்லை - சிறிது
  5. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  6. காயத்தூள் - சிறிது
  7. வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் - 2                                       

வறுத்து பொடிக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. மல்லி விதை -1 மேஜைக்கரண்டி
  3. வெந்தயம் - 1 தேக்கரண்டி 
  4. கடலை பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  5. உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  6. எள்ளு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. அடுப்பில் வெறும் கடாயில் மிளகாய் வத்தல், மல்லி விதை, வெந்தயம்,  கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் எள்ளு சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப் பண்ணி விடவும். நன்கு ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  2. புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். 
  4. கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு, வேர்க்கடலை கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
  5. பின்னர் காயத்தூள் சேர்க்கவும். புளித் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. புளிக் காய்ச்சல் கெட்டியானதும் உப்பு மற்றும் வறுத்து பொடித்த தூளை சேர்த்து கிளறி அடுப்பை ஆப் பண்ணவும்.                                                    
  7. ஆற வைத்துள்ள சாதத்தில் தேவையான அளவு புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான புளி சாதம் ரெடி.

எலுமிச்சை ஊறுகாய் / Lemon pickle

தேவையான பொருள்கள் -
  1. எலுமிச்சம்பழம் - 10
  2. மிளகாய்த்தூள் - 3 மேஜைக்கரண்டி
  3. காயத்தூள் - 1 தேக்கரண்டி
  4. வெந்தயத்தூள் - 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு - 100 கிராம்
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 6 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 2 தேக்கரண்டி
செய்முறை -
  1. எலுமிச்சம் பழத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் உப்பு சேர்த்து 2 நாட்கள்  வரை ஊற விடவும். ஒரு நாளில் 2 அல்லது 3 தடவை குலுக்கி மூடி வைக்கவும்.
  2. நன்கு ஊறிய பின் மிளகாய்த் தூள், காயத்தூள், வெந்த்தயத் தூள் சேர்த்து 2 நாட்கள் ஊற விடவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி  சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் எண்ணெயை ஊறுகாய் மேல் ஊற்றி நன்கு கிளறி பாட்டிலில் எடுத்து  வைக்கவும்.
      குறிப்பு -
  1. உப்பின் அளவு ஐந்துக்கு ஒரு பங்கு. அதாவது 5 கப் நறுக்கிய துண்டுகள் இருந்தால் ஒரு கப் உப்பு போட வேண்டும்.

Tuesday, October 8, 2013

கடலைப்பருப்பு சுண்டல்


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கடலைப்பருப்பு - 200 கிராம் 
  2. உப்பு - தேவையான அளவு 
  3. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி                              
     தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. மிளகாய் வத்தல் - 2
  5. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  6. கறிவேப்பிலை -சிறிது                                    
     செய்முறை -
  1. முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். 

  2. ஊறிய கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.                                  
  3. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.                                                                               
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தல், காயம், உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  5. பிறகு கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். கடலைப்பருப்பு சுண்டல் ரெடி.                       

Friday, October 4, 2013

கொண்டைக்கடலை சுண்டல்


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கொண்டைக்கடலை - 200 கிராம் 
  2. உப்பு - தேவையான அளவு 
  3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி















தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் -2
  5. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி  
  6. கறிவேப்பிலை - சிறிது 
     
 














செய்முறை -
  1. முதலில் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. ஊறிய கொண்டைக்கடலை, தேவையான அளவு தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். 
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  4. கடுகு வெடித்தவுடன் பச்சைமிளகாய், காயத்தூள், கறிவேப்பிலை, கொண்டைக்கடலை சேர்த்து நன்றாக கிளறவும்.                                            
  5. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான சுண்டல் ரெடி.

Tuesday, September 24, 2013

சிக்கன் குழம்பு / Chicken Curry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிக்கன் - 300 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு
  5. கொத்தமல்லி தழை - சிறிது
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 4 மேஜைக்கரண்டி 
  3. பெருஞ் சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. பட்டை - 1 இன்ச் அளவு 
  5. கிராம்பு - 2
  6. இஞ்சி - 1 இன்ச் அளவு 
  7. பூண்டு - 4 பல் 
  8. தேங்காய் - 50 கிராம் 
  9. சின்ன வெங்காயம் - 7
   தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - சிறிய துண்டு 
  3. கிராம்பு - 1
  4. வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. முதலில் சிக்கனை  சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  2. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்.
  4. வறுத்தவற்றை ஆறியதும் மிக்ஸ்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
  7. பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் 300 மில்லி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரை மூடி விடவும்.
  8. நீராவி வந்ததும் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். அல்லது உங்கள் குக்கருக்கு ஏற்ப விசில் விட்டு இறக்கவும்.
  9. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து குழம்பை பாத்திரத்திற்கு மாற்றி விடவும். கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கி விடவும். சுவையான சிக்கன் குழம்பு ரெடி.
குறிப்புகள் -
  1. எலும்போடு இருக்கும் சிக்கன் துண்டகள் தான் குழம்பிற்கு நல்ல ருசியை கொடுக்கும்.

Friday, September 20, 2013

பொட்டுக்கடலை துவையல்/ Fried Gram thuvaiyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

அரைக்க -  
  1. பொட்டுக்கடலை - 100 கிராம்
  2. பச்சை மிளகாய் - 2
  3. புளி - பாக்கு அளவு
  4. பூண்டுப் பல் - 3
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  6. கறிவேப்பிலை - சிறிது
  7. உப்பு - தேவையானஅளவு                             
செய்முறை -
  1. பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டுப் பல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். 
  2. பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்து வைக்கவும். பொட்டுக்கடலை துவையல் ரெடி.
குறிப்புக்கள் -
  1. தண்ணீர்  அதிகமாக ஊற்ற கூடாது. எனவே தண்ணீரை தெளித்து அரைக்கவும்.

பலாக்கொட்டை சாம்பார்




பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 100 கிராம்
  2. பலாக் கொட்டை - 10
  3. தக்காளி - 1
  4. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. காயம் - 1/4 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் - 1
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித்தழை - சிறிது                          
                            


















அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  5. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. தக்காளி, மிளகாய் மற்றும் பலாக்கொட்டையை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் பருப்பு, பலாக்கொட்டை, காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, பலாக்கொட்டை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து  கொதிக்க விடவும் .
  4. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை  சேர்த்து 5 நிமிடம்  கொதிக்க விடவும். 
  5. தேங்காய் வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து  கொதி வந்ததும் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, சீரகம், வெங்காயம்  ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து  நன்றாக கலக்கி  விடவும். சுவையான பலாக்கொட்டை சாம்பார் ரெடி .
Related Posts Plugin for WordPress, Blogger...