![]() |
தேவையான பொருள்கள் -
- கடலைப்பருப்பு - 100 கிராம்
- காயத்தூள் - சிறிது
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
- கடலைப்பருப்பை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு அதிலுள்ள தண்ணீரை நன்கு வடித்து விட்டு 4 மேஜைக்கரண்டி அளவு முழு பருப்பை தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- மீதமுள்ள பருப்புடன் காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள பருப்புடன் முழு பருப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
- எலுமிச்சை அளவு மாவை கையில் எடுத்து வடைகளாக தட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து நான்கு வடைகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும்.
- இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் டீயுடன் பரிமாறவும். இந்த அளவுக்கு 8 வடைகள் வரும்.