![]() |
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- காலிபிளவர் - 1/4 கிலோ
- சோளமாவு - 1 மேஜைக்கரண்டி
- அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி
- கடலை மாவு - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- கலர் பொடி - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
- காலிபிளவரை சிறுசிறு பூக்களாக பிரித்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக கழுவிக்கொள்ளவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவருடன் சோளமாவு ,அரிசி மாவு , கடலை மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கலர் பொடி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காலிபிளவர் துண்டுகளை போடவும்.
- இரு புறமும் திருப்பி விட்டு காலி பிளவர் வேகும் வரை பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
- மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான காலி பிளவர் சில்லி ரெடி.