Monday, October 30, 2017

பருப்பு துவையல் / Paruppu Thuvaiyal

தேவையான பொருட்கள் -
  1. துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  2. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  3. பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  4. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 2
  6. பூண்டு பற்கள் - 2
  7. கறிவேப்பிலை - சிறிது
  8. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே வைக்கவும். அதேபோல் துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
  2. அடுப்பை அணைத்து விட்டு சூடாக இருக்கும் கடாயில் தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வறுத்து எல்லாவற்றையும் ஆறவிடவும்.
  3. நன்கு ஆறிய பிறகு அதனுடன் உப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும். பருப்பு துவையல் ரெடி. 
  4. வத்தக்குழம்பு வைக்கும் போது சைட் டிஷ்சாக வைக்கலாம். தயிர் சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

4 comments:

  1. ஆகா.. பருப்புத் துவையல்..

    இது பக்கத்தில் இருந்தால் கூடுதலாக ரெண்டு கவளம் சாப்பிடலாம்!..

    ReplyDelete
  2. பருப்பு ஐயிட்டங்கள் எனக்கு பிடிக்கும்.

    ReplyDelete
  3. எனக்கு ரொம்பப் பிடித்த துவையல்.

    ReplyDelete
  4. பிராமண சமையலில் பூண்டு இருக்காது..மிளகு சேர்க்க வேண்டும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...