Friday, October 6, 2017

மணியாச்சி முறுக்கு / Maniyachi Muruku



தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
  2. பச்சரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
  3. கடலைப்பருப்பு - 3/4 கப் ( 150 கிராம் )
  4. பாசிப்பருப்பு - 1/4 கப் ( 50 கிராம் )
  5. நெய் - 1 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. இட்லி அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசியுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். நடுவில் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
      
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து  கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. ஆறிய பிறகு மிக்சியில் திரித்துக்கொள்ளவும்.
  4. அரைத்த மாவுடன் திரித்து வைத்துள்ள பருப்பு மாவு, நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேவையான அளவு மாவை எடுத்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழியவும். இரண்டு நிமிடங்கள் கழித்து முறுக்குகளை திருப்பி போடவும். 
  6. எண்ணெய் நுரைத்து வருவது  குறைந்தவுடன் அல்லது இரண்டு புறமும் பொன்னிறம் ஆனவுடன் ஒரு கம்பி கொண்டு முறுக்குகளை எடுத்து வடிதட்டில் போட்டு வைக்கவும். 
  7. எண்ணெய் நன்றாக வடிந்தவுடன் பரிமாறவும். சுவையான மணியாச்சி முறுக்கு ரெடி.

5 comments:

  1. ஆஹா.... கரகர மொறுமொறு

    ReplyDelete
  2. ஸூப்பர் படங்களாக இருக்கிறதே...

    ReplyDelete
  3. படங்களுடன் முறுக்குச் செய்முறை சூப்பர்...

    ReplyDelete
  4. எந்த ஊர் முறுக்காக இருந்தாலும்
    சுவை தான்.. அருமை தான்!..

    ReplyDelete
  5. வணக்கம் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...