பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- நன்கு பழுத்த தக்காளி - 6
- முந்திரிபருப்பு - 10
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் எடுக்க -
- தேங்காய் துருவல் - 1/2 கப்
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். முந்திரிப்பருப்பை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து அரை கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தக்காளிப்பழங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அடுப்பை அணைத்து 5 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
- 5 நிமிடம் ஆனதும் தண்ணீரை வடித்து விட்டு தக்களிப்பழங்களை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போடவும். பிறகு தக்காளியை தோலுரித்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்..
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
- பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி, மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.இறுதியில் முந்திரிப்பருப்பு பொடி சேர்த்து கொத்சு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- சுவையான தக்காளி கொத்சு ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ஸூப்பர் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇது தான் கொத்சு என்பதா!..
ReplyDeleteமுந்திரிப் பருப்பெல்லாம் சேர்ப்பதில்லை..
அடிக்கடி இதைச் செய்வது வழக்கம்..
வாழ்க நலம்..
சுவைக்க ஆர்வமாக இருக்கிறது. இதே முறையில் செய்து பார்த்து விடுகிறேன்.
ReplyDeleteஅடடா இதுவும் நல்லாத்தான் இருக்கும் போல .....
ReplyDelete