தேவையான பொருள்கள் -
- இட்லி - 3
- கடலைமாவு - 2 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - சிறிது
- தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
- இட்லிகளை உதிர்த்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு உருண்டைகளை போடவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான இட்லி போண்டா ரெடி.
- மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். மூன்று இட்லிக்கு 12 போண்டாக்கள் வரை வரும்.
ஆஹா வீட்டில் சொல்கிறேன்.
ReplyDeleteமிக வித்தியாசமான குறிப்பு சாரதா! பார்க்கவும் அருமை! சீக்கிரம் செய்து பார்க்கிறேன்!
ReplyDeleteபுது மாதிரியாக இருக்கிறதே...
ReplyDeleteநெடுநாட்களுக்குப் பின் - இட்லி போண்டாவுடன் வருகை..
ReplyDeleteவாழ்க நலம்!..
புதுசா இருக்கு மா...
ReplyDeleteநானும் சமைச்சு பார்க்கிறேன்...
கருத்து சொன்ன அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteசெய்து பார்க்கத் தூண்டுகிறது.
ReplyDeleteNICE
ReplyDelete