தேவையான பொருள்கள் -
- இடியப்பம் - 4
- லெமன் சாறு - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2
- கடுகு - 1 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும். பிறகு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, மிளகாய்வத்தல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பிறகு உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் லெமன் சாறு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுவையான லெமன் சேவை ரெடி.
இது கேள்விப்படாத புதுமையாக இருக்கிறதே...
ReplyDeleteசுவையும் புதுமையாக இருக்கும் சகோ.
Deleteஅட..! செய்து பார்க்கிறோம்...
ReplyDeleteகண்டிப்பாக செய்து பாருங்கள்.
DeleteSaratha Amma nalama?
ReplyDeleteLemon Sevai simply superb
i am fine shamee. After a long time shamee visit in my blog. Thank you so much. continue visit in my blog.
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு. இப்போ இடியாப்பத்தைத் தேடிப் போறேன்.
ReplyDeleteசுவை. இதுவும் புளிக்காய்ச்சல் கலந்து புளிசேவையும் செய்வதுண்டு. கூடவே இனிப்புச் சேவையும். இதைவிட இந்தத் தேங்காய் சர்க்கரை சேவை பிடிக்கும்!
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteஅருமையாய்ச் செய்த சேவை
...அனுதினம் உண்ணத் தேடும்
பெருமையைப் பெற்றீர் இங்கே
...பிரியமாய் வாழ்த்து கின்றேன்
வருமொரு காலம் தானும்
...வகைவகை யாகச் செய்தே
ஒருமுறை உண்டு நானும்
...உளம்மகிழ் வடைதல் வேண்டும் !
கண்ணுக்கும் மனதுக்கும் களிப்பூட்டு கின்றன கண்டிப்பாகச் செய்து சாப்பிடுவேன் இந்த வெள்ளிக் கிழமை அவ்வ்வ்வ்