Friday, July 14, 2017

வெங்காய கிரேவி / Onion Gravy


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வெங்காயம் - 3
  2. தக்காளி - 1
  3. பச்சை மிளகாய் - 2
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  5. மல்லித்தழை - சிறிது 
  6. கடலைமாவு - 1 மேஜைக்கரண்டி 
  7. கறிமசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு

தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. கடலைமாவை ஒரு மேஜைக்கரண்டி  தண்ணீர் ஊற்றி கரைத்து  வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு  சேர்த்து  வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி, கறிமசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  6. நன்கு வெந்ததும் கரைத்து வைத்திருக்கும் கடலைமாவை சேர்க்கவும். கிரேவி கெட்டியானதும்  மல்லித்தழை சேர்த்து  அடுப்பை அணைக்கவும். சுவையான வெங்காய கிரேவி ரெடி. பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

3 comments:

  1. மகளிடம் சொல்லி செய்யச் சொல்லணும்.

    ReplyDelete
  2. மிகவும் நல்ல கிரேவி... நன்றி அம்மா...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...