தேவையான பொருள்கள் -
- நெல்லிக்காய் - 10
- மிளகாய் தூள் - 2 மேஜைக்கரண்டி
- கடுகு - 2 மேஜைக்கரண்டி
- வெந்தயம் - 2 மேஜைக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நெல்லிக்காய்களை நன்கு கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்களில் வெந்து விடும்.
- வெந்த நெல்லிக்காய்களை சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறிய பிறகு கையால் அழுத்தினால் நெல்லிக்காய் சிறு தூண்டுகளாகவும் கொட்டைகள் தனியாகவும் வந்து விடும்.
- அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்து நின்றவுடன் தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் வெந்தயத்தை போட்டு நன்றாக வறுத்து தனியாக வைக்கவும்.
- ஆறிய பிறகு பொடி பண்ணிக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், பெருங்காயத்தூள் போட்டு ஒரு நிமிடம் கிளறி அதோடு நெல்லிக்காய்களை சேர்த்து கிளறவும்.
- பிறகு அதனுடன் கடுகு தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.
அழகு.. அருமை..
ReplyDeleteநெல்லிக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது..
பயனுள்ள பதிவு.. வாழ்க நலம்..
கடுகை நாங்கள் பொடியாக்கமாட்டோம். எண்ணெய் சுட்டதும் அதில் கடுகை வெடிக்கவிட்டபிறகு மற்ற செய்முறையெல்லாம் அதேதான். மஞ்சத்தூள் சேர்ப்போம்.
ReplyDeleteஸூப்பர் ஐயிட்டம்.
ReplyDeleteஊறுகாய்ன்னா மாங்காய்தான் என்பது போல நெல்லிக்காய் ஊறுகாய் அவ்வளவாகச் செய்வதில்லை! நல்ல ரெஸிப்பி.
ReplyDeleteகருத்து சொன்ன அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றி.
ReplyDeleteரொம்ப நன்றாக இருக்கும். மகிழ்ச்சி
ReplyDeleteI have like this receipy
ReplyDeleteI have like this receipy
ReplyDelete