பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- காலிபிளவர் - 1/4 கிலோ
- சோளமாவு - 1 மேஜைக்கரண்டி
- அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி
- கடலை மாவு - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- கலர் பொடி - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
- காலிபிளவரை சிறுசிறு பூக்களாக பிரித்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக கழுவிக்கொள்ளவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவருடன் சோளமாவு ,அரிசி மாவு , கடலை மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கலர் பொடி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காலிபிளவர் துண்டுகளை போடவும்.
- இரு புறமும் திருப்பி விட்டு காலி பிளவர் வேகும் வரை பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
- மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான காலி பிளவர் சில்லி ரெடி.
படமே ஆசையைத் தூண்டுகிறது
ReplyDeleteஉடன் வருகைக்கு நன்றி சகோ.
ReplyDeleteமிளகாயைக் குறைவாகச் சேர்த்து செய்வதுண்டு..
ReplyDeleteஎளிதான செய்முறை..
super
ReplyDeleteஎளிய செய்முறை
ReplyDeleteThank you
ReplyDeleteகான்பிளவர் மாவை மட்டும் சேர்த்து ஊற வைத்து செய்ய முடியாதா?
ReplyDelete