பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- கேப்பை - 3/4 கப்
- இட்லி அரிசி - 1/4 கப்
- உளுந்து - 1/4 கப்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை -
- கேப்பை , இட்லி அரிசி , உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஊறிய பிறகு அதோடு உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு இதே போல் பொங்கி இருக்கும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து ஊற்றி விரித்து விடவும். வெந்ததும் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான கேப்பை தோசை ரெடி.
- கேப்பை தோசைக்கு காரச்சட்னி நன்றாக இருக்கும்.
உடலுக்கு மிகவும் நல்லது - கேழ்வரகு..
ReplyDeleteகேழ்வரகு மாவுடன் கொஞ்சமாக வெல்லம் கலந்து தோசை வார்ப்பதுண்டு..
கருத்துக்கு நன்றி சார்.
Deleteசத்தான, முத்தான உணவு.
ReplyDeleteகருத்துக்கு நன்றி sako
ReplyDeleteசத்துணவு! நண்பர் வீட்டில் ஓரிரு முறை சாப்பிட்டிருக்கிறேன்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
ReplyDeleteVery healthy breakfast !! Thanks a TON !!
ReplyDelete