Friday, December 1, 2017

பூண்டு சட்னி / Garlic Chutney



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தோலுரித்த பூண்டு பற்கள்  - 1/2 கப் 
  2. நறுக்கிய தக்காளி - 1
  3. மிளகாய் வத்தல் - 2
  4. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு லேசாக வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே கடாயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூண்டு பற்கள், தக்காளி இரண்டையும் தனித்தனியாக  வதக்கி மிளகாய் வத்தலோடு சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. நன்கு ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். 
  4. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள இரண்டு மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
  5.  கடுகு வெடித்ததும் எடுத்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

4 comments:

  1. வெங்காயம் தேவை இல்லையா? இதை ஒரு முறை செய்து பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  2. I like your way of cooking methods I follow your chutney and sambar yummiest

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...