தேவையான பொருள்கள் -
- பிரட் துண்டுகள் - 4
- கடலை மாவு - 1/2 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பிரட் துண்டுகளை கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி எடுத்து கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா பிரட் துண்டுகளையும் இதே முறையில் போட்டு எடுக்கவும். சுவையான பிரட் பஜ்ஜி ரெடி. காபி, டீயுடன் பரிமாறவும்.
சுவை.
ReplyDeleteஇன்று செய்ய சொல்லணும்.
ReplyDeleteஇந்த Bread/Biscuit வகையறாக்களையும் கடலை மாவு சமாச்சாரத்தியும் மிகவும் குறைத்தாயிற்று..
ReplyDeleteநலம் வாழ்க..
அருமையான வழிகாட்டல்
ReplyDeleteசுவைப்போம்
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரட் பஜ்ஜி புதிதான அறிமுகம். அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
என் பதிவாக தைமகள் வருகை. நேரம் கிடைக்கும் போது வந்து கருத்திடவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் !
ReplyDeleteபங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !