Tuesday, March 6, 2018

அரிசி பாயாசம் / Rice Kheer

நான் வலைப்பூ ஆரம்பித்து இன்று ஐந்து ஆண்டுகள்  நிறைவடைந்து ஆறாம் ஆண்டு  தொடங்குகிறது. நான் இது வரை 380 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளை பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும், சில பதிவுகளை செய்து பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல நாளில் ஈஸியான அரிசி பாயாசம் ஸ்வீட் பதிவு !!


தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 1/4 கப் 
  2. பால் - 4 கப் 
  3. நெய் - 1/4 கப் 
  4. சீனி - 3/4 கப் 
  5. முந்திரிப்பருப்பு - 1/4 கப் 
  6. காய்ந்த  திராட்சை - 10
  7. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராடசை இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும்.
  2. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில்  ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி  கொதிக்கவிடவும்.
  3. கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து இடையிடையே கிளறி விடவும். அரிசி நன்கு வெந்து பால் பாதியாக குறைந்ததும் சீனியை சேர்த்து  நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
  4. இறுதியில்  நெய், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான அரிசி பாயாசம் ரெடி.

13 comments:

  1. அன்பின் நல்வாழ்த்துகள்...

    சுடச் சுட அரிசி பாயசம்... பாரம்பரிய உணவு..

    வாழ்க நலம்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சாரதா மேடம். நீங்கள் இன்னும் பல குறிப்புகள் பதிவு செய்ய விரும்புகிறோம்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    நலமா? தங்களை கண்டு நீண்ட நாட்கள் ஆகி விட்டது. அரிசி பாயாசம் படங்களுடன் செய்முறை விளக்கங்கள் அருமை. நான் பச்சரிசியில் இந்த மாதிரி செய்துள்ளேன். ஆனால் நீங்கள் பாசுமதி அரிசியில் அதுவும் பாலிலே கொதிக்க வைத்து செய்துள்ளீர்கள்.மிகவும் ருசியாக இருக்குமென்று நினைக்கிறேன். அடுத்த முறை இவ்வாறு செய்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  5. ​வாழ்த்துகள். சுவையான ரெஸிப்பி.

    ReplyDelete
  6. அரிசிப் பாயசம் வெல்லத்தில் அல்லவா செய்வார்கள். இன்னொரு செய்முறை, அரிசியையும் தேங்காயையும் ஊறவைத்து அரைத்துச் செய்யும் முறை.

    ஜீனி போட்டுச் செய்தால் அது பால் பாயாசமல்லவா?

    இருந்தாலும் ரெசிப்பி நன்றாக இருக்கு.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    தங்களுக்கு என் மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  8. I like sweets n deserts. Very easy to make !! Young n old can take !!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...