Monday, March 26, 2018

பச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பச்சை பயறு - 1/2 கப் 
  2. தக்காளி - 1
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித் தழை - சிறிது 
அரைக்க -
    1. தேங்காய் துருவல் - 1/4 கப் 
    2. முந்திரிப்பருப்பு - 5
    தாளிக்க -
    1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
    2. சீரகம் - 1 தேக்கரண்டி 
    3. பெரிய வெங்காயம் - 1
    செய்முறை -
    1. பச்சை பயறை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
    2. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும்.
    3. தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
    4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்  போடவும். பிறகு வெங்காயம்  சேர்த்து வதக்கவும்.
    5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    6. தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
    7. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை, அவித்து வைத்துள்ள பச்சை பயறு சேர்த்து 5 நிமிடம்  கொதிக்க விட்டு இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும் சுவையான பச்சை பயறு கிரேவி ரெடி.
    8. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    12 comments:

    1. அருமை சகோ தளம் வடிவமைப்பு மாறுதலாக இருக்கிறதே.... ஸூப்பர்

      ReplyDelete
      Replies
      1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

        Delete
    2. வணக்கம் சகோதரி

      அருமையான ஒரு கிரேவி. பார்க்கும் போதே மிகவும் நன்றாக உள்ளது. குறிப்புகளை எடுத்துக் கொண்டேன் படங்களும் செய்முறையும் அழகாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி சகோதரி. நேரம் கிடைக்கும் போது என் வலைத்தளம் வந்தால் மகிழ்வடைவேன். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      ReplyDelete
      Replies
      1. கருத்துக்கு நன்றி சகோதரி. தங்கள் வலைத்தளத்திற்கு வருகிறேன்.

        Delete
    3. படிப்படியான படங்களுடன் சுவையான குறிப்புகள்.

      ReplyDelete
    4. கருத்துக்கு நன்றி

      ReplyDelete
    5. முளை கட்டிய பயறிலும் பண்ணலாம். மி.வத்தல், சீரகம், தேங்காய், வெங்காயம் மட்டும் வதக்கி அரைத்தும் பண்ணலாம். :) சாதத்தோடும் கலந்து சாப்பிடலாம்.

      ReplyDelete
    6. This whole moong gravy is very nutritious n can take young n old !!

      ReplyDelete
    7. நாளைக்கு பூரிக்கு இதான் சைட் டிஷ்

      ReplyDelete
    8. பார்க்க அருமையாக இருக்கிறது.. கரம் மசாலா சேர்க்காமல் செய்து பார்க்கிறேன்.. செய்முறைக்கு நன்றி

      ReplyDelete

    Related Posts Plugin for WordPress, Blogger...