Wednesday, December 13, 2017

சீவல் / Seeval



தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி  - 1 கப் 
  2. கடலை மாவு - 1 /2 கப் 
  3. மிளகாய் வத்தல் - 5
  4. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  5. காயத் தூள் - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
  1. இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து அதோடு மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் கடலை மாவு, வெண்ணெய், காயத் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு குழலில்  சீவல் அச்சை போட்டு பிசைந்த மாவை குழாய் கொள்ளும் அளவுக்கு நிரப்பி வட்டமாக பிழிந்து விடவும்.
  3. ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
  4. எண்ணெய் உறிஞ்சியவுடன்  ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். டீயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

8 comments:

  1. அருமையான ரெசிப்பி மா...

    ReplyDelete
  2. என் நண்பன், ரெண்டு நாள் முன்பு, மிக்சரும், ஓமப்பொடியும், காராசேவும், சீவலும் நாகர்கோவிலிலிருந்து வரும் சகோதரனிடம் சென்னைக்கு என் வீட்டுக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறேன் என்றான். சீவல் என்றால் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் புரியாத தின்பண்டங்களில் விருப்பம் இல்லை. இப்போது உங்கள் இடுகையைப் படித்தபிறகுதான், நாங்கள் செய்யும் ரிப்பன் பகோடாவோ என்று தோன்றுகிறது. செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
  3. அருமை..
    எங்கள் ஊரிலும் இது பிரசித்தம்..

    ReplyDelete
  4. படங்களுடன் விளக்கமாய்...
    அருமை அம்மா.

    ReplyDelete
  5. ரிப்பன் பக்கோடாவுக்கு பெரும்பாலும் கடலைமாவு, கொஞ்சம் அரிசி மாவும் கலப்போம். இது வித்தியாசமாய் இருக்கிறது. மெல்லிசாக வருமோ?

    ReplyDelete
  6. ரிப்பன் பக்கோடாவைச் சீவல் என்பீர்களா? இதுக்கு நாங்க மெஷினில் அரைச்ச மாவில் கூடச் செய்வோம். அரிசியோடு சேர்த்துக் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு மெஷினில் கொடுத்துத் திரித்துக் கொண்டு மி.வத்தல் ஊற வைத்துத் தேங்காய், உப்போடு சேர்த்து அரைத்து மாவில் கலந்து வெண்ணெய் போட்டுப் பிசைந்து பண்ணுவோம். கரகரனு இருக்கும்.

    ReplyDelete
  7. Excellent evening snacks and for also very useful for the journey !!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...